2025 ஜூலை 26, சனிக்கிழமை

யூனியன் வங்கியிடமிருந்து புதுவருட வெகுமதி

Gavitha   / 2017 மார்ச் 20 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 மார்ச் 01- யூனியன் வங்கி எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அண்மையில் “முந்தி வரும் புத்தாண்டுக் கொடுக்கல் வாங்கல் (Kalin Avurudu Ganudenu”) என்ற முன்கூட்டிய வெகுமதிகளை சேமிப்புகள் மீது அளிக்கும் ஊக்குவிப்பினை முன்னெடுக்கின்றது.  

2017 மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரை இந்த வெகுமதிச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக வாடிக்கையாளர்களுக்கு தொகுதிகள் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மை மிகுந்த சேமிப்பினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. இதன் ஊடாக வாடிக்கையாளகள் தமது சேமிப்புகள் வளர்ச்சியடைவதை நோக்க முடிவதுடன், தமது சேமிப்புகளுக்கென பெறுமதிமிக்க வெகுமதிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.  

இந்த வெகுமதிகள் ஏற்கெனவே உள்ளவை மற்றும் புதிய சேமிப்பு மற்றும் வைப்புக் கணக்குகள் மீது வழங்கப்படும். அடுக்குகள் அடிப்படையில் அளிக்கப்படும் இந்த வெகுமதிக்கட்டமைப்பானது, 5000ரூபாய் முதல் 24,999 ரூபாய் வரையான வைப்புகளுக்கு ஹொட் ஃகூல் மக் ஒன்றினை அளிக்கின்றது. ரூ. 25,000 முதல் ரூ. 99,999 வரையான வைப்புகளுக்கு மின்சார கேத்தல் அல்லது அயர்ன் ஒன்று வெகுமதியளிக்கப்பட ரூ. 100, 000 முதல் ரூ. 999,999 வரையான வைப்புகளுக்கு பெடஸ்டல் காற்றாடிகள் அல்லது மிக்சர் கிரைண்டர் அளிக்கப்படும். ரூ. 1,000,000 இற்கு மேற்பட்ட வைப்புகளுக்கு LED தொலைக்காட்சிகள் அல்லது மைக்ரோவேவ் அவண்கள் வழங்கப்படும். அனைத்து உபகரணங்களும் அங்கிகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றினூடாக வழங்கப்படுவதுடன், ஒரு வருட உத்தரவாத காலத்தினைக் கொண்டிருக்கும்  

யூனியன் வங்கியானது, வைப்பாளர்களுக்கு கவர்ச்சிகரமான திரும்பல்கள் மற்றும் மேலதிக பெறுமதி சேர் அனுகூலங்கள் ஆகியவற்றை அளிக்கும், யூனியன் வங்கி அல்ட்ரா சேவர் மற்றும் யூனியன் வங்கி சேலறி பவர் கணக்குகள் உள்ளிட்ட ஒரு தொகை சேமிப்பு மற்றும் வைப்பு சேவைகளை அளிக்கின்றது. இந்த ஊக்குவிப்பானது, குறித்த அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டவாறு, வங்கியியல் சௌகர்யத்தினை அனுபவிப்பதற்கான சிறந்த வாய்ப்பாகும். வாடிக்கையாளர்கள் தமது வங்கிக் கணக்குகளை நாடளாவிய ரீதியிலுள்ள 65 வங்கிக் கிளைகளில் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன், LankaPay ஊடாக விஸ்தரிக்கப்பட்ட 3,600 ATM வலையமைப்பின் மூலமாகவும் அணுக முடியும்  

யூனியன் வங்கியானது, வாடிக்கையாளர்களின் வாழ்க்கைப்பாணிக்கு ஏற்றவகையில், அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் புத்தாக்க வங்கி அனுபவத்தினை தமது ஒன்லைன் வங்கியியல் தளம் மற்றும் மொபைல் Banking app ஊடாக அளிக்கின்றது.  

“முந்தி வரும் புத்தாண்டுக் கொடுக்கல் வாங்கல்” மட்டுப்படுத்தப்பட்ட வழங்கல் என்பதுடன், கையிருப்பு உள்ளவரை மட்டுமே இச்சலுகை இருக்கும். வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள யூனியன் வங்கிக் கிளைக்கு விஜயம் செய்வதன் ஊடாக அல்லது 24 மணிநேர அழைப்பு நிலைய இலக்கமான 011-5800800 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொள்வதன் ஊடாக இந்த வழங்கலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X