Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் பெருந்தோட்டத் துறையுடனான தனது ஈடுபாடுகளைத் தொடர்ச்சியாக விஸ்தரித்து வருகின்ற யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், தம்பேதென்ன எஸ்டேட்டில் அண்மையில் யுனிலீவர் “Perfect Estate” செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.
யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான கார்ள் குரூஸ், இதனை ஆரம்பித்து வைத்திருந்தார். தொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவுச் சங்கத்துடன் இணைந்து முற்றிலுமாக புனரமைப்புச் செய்யப்பட்ட எஸ்டேட்டில் உள்ள நலன்புரி விற்பனை நிலையத்தையும் அவர் வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.
யுனிலீவர் நிறுவனத்தின் நிலைபேற்றியலுடன் வாழ்க்கையை முன்னெடுக்கும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக தேசத்திலுள்ள மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அது உதவி வருகின்றது. யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனமும், பேராதனை பல் வைத்தியபீடமும் இணைந்து, இந்த எஸ்டேட்டில் பற் சுகாதார மருத்துவ முகாமொன்றை ஏற்பாடு செய்திருந்தன. இதில் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர். இந்த மருத்துவ முகாமில் பல் மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன.
2015ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட “Perfect Estate” செயற்றிட்டமானது, நிலைபேற்றியல் கொண்ட வர்த்தகச் சந்தை முறைமையொன்றை உருவாக்கி, எட்டுவதற்கு சிரமமான கிராமப்புற சமூகங்களுக்கு தனது உற்பத்திகள் தொடர்பான விழிப்புணர்வு, அறிவு மற்றும் அவற்றை உள்வாங்கிக் கொள்வதை முன்னெடுக்கும் Perfect Store செயற்றிட்டத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பபட்டுள்ளது. கிராமப்புறங்களிலுள்ள பெருந்தோட்டங்களை இனங்கண்டு, உற்பத்தி தொடர்பான அறிவூட்டல் அமர்வுகள், சமூகங்கள் மத்தியில் ஆரோக்கியம், அழகு மற்றும் சுகாதாரம் தொடர்பானச் செயலமர்வுகள் அடங்கலாக பல்வேறு செயற்றிட்டங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது.
சிக்னலுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட பற் சுகாதார சிகிச்சை முகாம்கள் மற்றும் லைவ்போயுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட கைச் சுகாதார விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் அவற்றுள் அடங்கியுள்ளன.
இந்த முன்னெடுப்பு தொடர்பில் யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் வாடிக்கையாளர் மேம்பாட்டுத் துறை பணிப்பாளரான அருண மாவில்மட அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கைச் சந்தையில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள யூனிலீவர், இங்கே எமது வாடிக்கையாளர்களுடன் மிகவும் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது.' என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago