2025 ஜூலை 30, புதன்கிழமை

யுனிலிவரின் GamataApi முன்னெடுப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லனவற்றைச் செய்வதன் மூலமாக நன்றாகச் செயற்படுதல்” என்பது யுனிலிவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அன்றாட வியாபார அணுகு முறையின் ஓர் உள்ளங்கமாகும். வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் முயற்சியின் கீழ், நிலைபேற்றியல் கொண்ட வாழ்க்கையை ஒரு பொதுக்களமாக மாற்றியமைக்கும் நிறுவனத்தின் இலட்சியத்துக்கு உயிரூட்டும் வகையில், சௌபாக்யாதிட்டம் மலர்ந்தது.

சௌபாக்யா சிறு-தொழில் முயற்சித் திட்டமானது தொழில் முயற்சியினூடாக கிராமப்புற சமூகங்களைச் சார்ந்த பெண்களுக்கு வலுவூட்டி, அவர்கள் தத்தமது இல்லங்களில் யூனிலிவர் வர்த்தக நாமங்களுக்கு நேரடித் தூதுவர்களாக மாறுவதைக் காணும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2003ஆம் ஆண்டில் இத்திட்டம் அமுலாக்கப்பட்டதுடன், பொருளாதார உள்வாங்கலின் முதற்படியாக 5 துணிச்சலான பெண் தொழில்முயற்சியாளர்கள் இத்திட்டத்தில் இணைந்து கொண்டிருந்ததுடன், இன்று 4,000க்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட பெருவிருட்சமாக, துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் அதிகளவான பெண்களை ஈடுபடுத்தும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும் நோக்குடன் இந்த முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, அவர்களின் சுபீட்சத்துக்கு வழிகாட்டுவதுடன், யுனிலிவர் நிறுவனத்துக்குத் தனித்துவமான ஒரு விநியோக மார்க்கத்தையும் திறந்துள்ளது.  

“யுனிலிவர், ஸ்ரீ லங்கா நிறுவனம் இலங்கையில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு நிறுவனமாகத் திகழ்வதுடன், கஷ்டப்படுபவர்களின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு, அதன் காரணமாக இந்த ஆண்டில் GamataApi முன்னெடுப்பை ஆரம்பித்திருந்தது.

கிராமப்புறங்களிலுள்ள சமூகங்கள், அடிப்படை வாழ்க்கைத் தரங்களை அடையப்பெற உதவ நாம் விரும்பியதுடன், இது விசாலமான, நற்பயனளிக்கும் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளைத் தோற்றுவிக்கும் என நாம் நம்புகிறோம். மேலும் சௌபாக்யா தொழில் முயற்சியாளரின் சிறப்பான முயற்சிகளை அவரது சமூகத்தின் மத்தியில் இனங்கண்டு, போற்றுவதற்கு இந்த முயற்சி வழிகோலும். அதன் மூலமாக அவர்களது தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்கும்,’ என்று யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் புதிய மார்க்கங்களுக்கான தலைமை அதிகாரியான ரோஹித அன்னாசிவத்த குறிப்பிட்டார்.  

இது வரை யுனிலிவர் நிறுவனத்தின் “GamataApi முன்னெடுப்பின் கீழ் தொரணகிவெல என்ற இடத்தில் சன சமூக நிலையம் ஒன்றும், அம்பேகொட என்ற இடத்தில் பஸ் தரிப்பிடம் ஒன்றும், அக்மீமன என்ற இடத்தில் கிணறு ஒன்றும், ஜெயந்திபுர மற்றும் மதுகொட்டனரவ ஆகிய இடங்களில் ஆரம்ப பாடசாலைகளுக்கு சுகாதார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .