2025 ஜூலை 26, சனிக்கிழமை

யூனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்துக்கு கௌரவம்

Gavitha   / 2017 ஏப்ரல் 11 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனிலீவர் ஸ்ரீ லங்கா, அண்மையில் இடம்பெற்ற SLIM-Nielsen மக்கள் விருதுகள் 2017 நிகழ்வில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமின்றி, விரைவாக விற்றுத்தீருகின்ற நுகர்வோர் உற்பத்தி வர்த்தகநாமங்களில் (FMCG) முன்னிலை வகிப்பவர் என நாடெங்கிலுமுள்ள மக்களின் இதயங்களில் தொடர்ந்தும் தான் வீற்றிருப்பதை நிரூபித்துள்ளது.

விரைவாக விற்றுத்தீரும் நுகர்வோர் உற்பத்திகளின் பெருநிறுவனத்தின் பிரதான வர்த்தகநாமங்களான சன்லைட், விம், லைவ்போய், சிக்னல் மற்று லாவோஜி ஆகியன பெருமதிப்பு மிக்க விருதுகளை வென்றுள்ளன. நல்லனவற்றைச் செய்வதன் மூலமான சிறந்த ஸ்தானத்தில் திகழுதல் என்ற யூனிலீவர் நிறுவனத்தின் கொள்கையைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சமீபத்தைய வெற்றி அமையப்பெற்றுள்ளதுடன், நுகர்வோரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் அசைக்க முடியாத அபிமானத்தைக் கொண்டுள்ளமையையும் காண்பிக்கின்றது.  

நாட்டிலுள்ள மிகவும் புகழ்பூத்த வர்த்தகநாமங்களுள் ஒன்றான சன்லைட், “வருடத்தின் வீட்டுப் பராமரிப்பு வர்த்தகநாமம்” ஆகவும், கிருமிகளிடமிருந்து பாதுகாப்பளிப்பது தொடர்பில் யூனிலீவரின் பிரதான வர்த்தகநாமமான லைவ்போய், “வருடத்தின் இளையோரின் அபிமானத்தை வென்ற விரைவாக விற்றுத் தீருகின்ற நுகர்வோர் உற்பத்தி வர்த்தகநாமம்” ஆகவும், செழுமை நலம் மிக்க இலங்கை தேயிலையை வழங்கும் யூனிலீவரின் லாவோஜி, “வருடத்தின் பான வகை வர்த்தகநாமம்” ஆகவும், பாத்திரங்களைச் சுத்தம் செய்வதில் இலங்கையின் அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாகக் திகழுகின்ற விம், “வருடத்தின் விரைவாக விற்றுத்தீருகின்ற நுகர்வோர் உற்பத்தி வர்த்தகநாமம்” ஆகவும் மக்களின் அமோக வாக்குகளை அள்ளிக் குவித்திருந்தன.  

இவ்வெற்றி தொடர்பில் யூனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான கார்ள் குரூஸ் கருத்து வெளியிடுகையில், “வேறு விருது வழங்கல் நிகழ்வுகளைப் போலன்றி, மக்களின் தெரிவின் வெளிப்பாடாக அமைகின்ற SLIM Nielsen மக்கள் விருதுகள் நிகழ்வில் மீண்டும் ஒரு முறை இனங்காணல் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளமை எமக்கு கிடைக்கப்பெற்ற கௌரவமாகும். கடந்த காலங்களில் சமூகத்தின் மத்தியில் எமது வர்த்தகநாமங்கள் கட்டியெழுப்பியுள்ள நேசம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றிற்கு சான்றாக இவ்விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மக்களின் அன்றாட வாழ்வில் நாம் ஒரு அங்கமாக மாறியுள்ளோம் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன்”  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X