2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ். சிங்கர் கொண்டாட்டம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 4 நாட்கள் நிகழ்வான 'யாழ். சிங்கர் கொண்டாட்டம்' நிகழ்வின் இறுதி நாள் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெறுகின்றது

. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஓகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வு, இன்று 23ஆம் திகதி நிறைவடையும்.
இந்நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு ஆனந்தமான அனுபவத்தை வழங்கி வருகிறது.

இலங்கையில் சிங்கர்; நிறுவனம் சந்தைப்படுத்தி வருகின்ற உலகத்தரம் வாய்ந்த 40க்கும்  மேற்பட்ட வர்த்தக நாமங்களின் கீழான உற்பத்திகள், இந்த யாழ். சிங்கர்; கொண்டாட்ட நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பங்குபற்றியவர்கள் அலைபேசிகள், டெப் (வயடி) சாதனங்கள் போன்ற தனிப்பட்ட பாவனை சாதனங்கள் முதல் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் சமையலறைச் சாதனங்கள் என பல்வேறு வகையான உற்பத்திகளுக்கு 50மூ வரையான விலைத் தள்ளுபடிகளைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும், தினசரி சமையல் விளக்க நிகழ்வுகள், தையல் விளக்க நிகழ்வுகள், புதிய உற்பத்திகளின் அறிமுகம், சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், போட்டிகள், வியப்பூட்டும் பரிசுகளுடன் தினசரி குலுக்கல் சீட்டிழுப்புக்கள், மாபெரும் இசை நிகழ்வு மற்றும் பல வேடிக்கை நிரம்பிய நிகழ்வுகள் அடங்கலாக முழுக் குடும்பத்தினருமே மகிழக்கூடிய வகையில் பல்வேறுபட்ட செயற்பாடுகள் இன்றும் இடம்பெறுகின்றன.  

இக்கொண்டாட்ட நிகழ்வு தொடர்பில் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க கருத்து வெளியிடுகையில், 'நாட்டின் அனைத்து பாகங்களிலும் வளர்ச்சிகண்டு வருகின்ற எமது வாடிக்கையாளர் தளத்தை எட்டுவதில், சிங்கர் எப்போதும் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

எமது விசாலமான வலையமைப்பின் மூலமாக நாம் அனைத்து பகுதிகளிலும் கால்பதித்திருப்பினும், எமது தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டு, விரைவாக மாற்றம் கண்டுவருகின்ற, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகளை தள்ளுபடிகளுடனான விலைகளில் அவர்கள் கொள்வனவு செய்ய வாய்ப்பினை வழங்கவேண்டியது அவசியம் என நாம் நம்புகின்றோம். 'யாழ். சிங்கர் கொண்டாட்ட' நிகழ்வின் மூலமாக முழுக் குடும்பத்தினருமே பங்குபற்றி மகிழும் வகையில் புதிய மட்டத்திலான நிகழ்வை நாம் ஏற்பாடு செய்துள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X