Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 19 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, 12ஆவது தடவையாக நாளை மறுதினத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.
கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பானது, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் நந்தரூபன், யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை வடக்கில் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற தளம் என்றார்.
இந்த கண்காட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்ஈசிஎஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கிகாரம் வழங்கியுள்ளன.
அனைத்து பொதுமக்களையும் கண்காட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மேலும் தகவல் விபரங்களுக்கு www.jitf.lk ஐப் பார்வையிடவும் அல்லது 077-1093792 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும் என்றனர்.
இன்றைய ஊடக சந்திப்பின்போது வர்த்தக தொழில்துறை மன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சிக்கான அனுசரணையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
52 minute ago
1 hours ago