2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ் நகரில் சணச லைஃப் இன்சூரன்சின் புதிய கிளை

Freelancer   / 2023 நவம்பர் 02 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சணச லைஃப் இன்சூரன்ஸ் பீ.எல்.சி தனது புதிய கிளையை யாழ்ப்பாண நகரில் திறந்துள்ளது. இல.237,ஸ்டாண்ட்லி வீதிஎனும் முகவரியில்இந்த புதிய கிளை அமைந்துள்ளது.

நாட்டின் சம்பிரதாயங்களுக்கு முதலிடம் கொடுத்து இடம்பெற்ற இத் திறப்பு விழா நிகழ்வு, சணச குழுமத்தின் தலைவர் கலாநிதி பி.ஏ.கிரிவந்தெனிய தலைமையில் நடைபெற்றதுடன் சணச லைஃப் இன்சூரன்சின் நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் மட்ட முகாமையாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.யாழ்ப்பாண கிளையை தெரிவு செய்யும் போது யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய முறைமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அனைத்து சமய நடவடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் புராதன சம்பிரதாயங்களை பின்பற்றி கிளையின் நடவடிக்கைகளை செயற்படுத்தியமை இதன் மூலமாக தெளிவாகின்றது.அதிகளவான வர்த்தகங்கள், உயர் கல்வி நிலையங்கள், நிதி நிறுவனங்கள் என்பன அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படுவதுடன் யாழ் நகர மக்களுக்கு மேலும் சிறந்த வசதிகளையும், இலகுவான முறையில் தமது காப்பீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள எமது நிறுவனமானது, தனது இன்னும் ஒரு புதிய ஆரம்பமாக யாழ்ப்பாணக் கிளையை திறக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதில் உயர் தரத்துடன் செயற்படும் சணச லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், தொடர்ந்தும் உள்நாட்டு வெளிநாட்டு விருதுகளைப் பெற்றுள்ளதுடன், கொவிட் தொற்றுநோய் பரவல் போன்ற சவால்களுக்கு சிறப்பாக முகங்கொடுத்து பலம்மிக்க வர்த்தகத்தை உருவாக்கியுள்ளமை மட்டுமல்லாது மக்களுக்கான நலன்புரி நிகழ்வுகள் பலவற்றினை நாட்டில் செயற்படுத்துவதில் முக்கிய பங்களிப்பினை வழங்கும் நிறுவனமாகவும் சணச லைஃப் திகழ்கின்றது.

அதே போல் நாடு பூராகவும் அனைத்து மக்களுக்கும் அந்நியோன்ய சேவையினை வழங்கி அனைத்து ஆயுட் காப்புறுதி தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் திறனை கொண்டதுடன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உயரிய நம்பகத்தன்மையான பிரதிபலன்கள் மற்றும் சேவை வழங்குநராக இலங்கையின் பொருளாதாரத்தில் தனித்துவமாக பங்காற்றி செயற்படும் சணச லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனமானது இலங்கை முழுவதும் 100 க்கும் அதிகமான கிளைகளை உள்ளடக்கிய பாரிய காப்புறுதி நிறுவனமாகவும் திகழ்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X