2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் இளம் சுற்றுலா தூதுவர்கள்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் சுற்றுலாத்துறை தூதுவர் முயற்சியின் யாழ் நிகழ்ச்சித்திட்டம், அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் YouLead இன் ஆதரவுடனும், ஜெட்விங்கின் கைகோர்ப்புடனும் தனியார் துறை சுற்றுலா திறன்கள் குழுவினால் நடத்தப்பட்ட இந்த முதன்மை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக சமையற்கலை முதற்கொண்டு கழிவு முகாமைத்துவம் வரை அனைத்து விடயங்கள் குறித்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 இளம் ஆண்கள், பெண்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தனர்.   

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட YouLead இன் 35 ஆரம்ப இளம் தலைவர்களில் ஒருவரும், பேச்சாளருமான சகிலா பஞ்சாட்சரத்தின் அளப்பரிய ஆற்றலுடன் இந்த யாழ்.நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். ஜெட்விங் ஹோட்டலில் தனது வாழ்வியலை மாற்றியமைத்துக் கொண்ட வெற்றிகரமான வாழ்க்கையை வரலாற்றையும், முன்மாதிரியாகவும் சகிலா திகழ்கிறார். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சுற்றுலா தூதுவர் குழுவின் வழிகாட்டுநராக உள்ளதுடன், குறிப்பாக வட மாகாணத்திலிருந்து பங்குபற்றிய ஒன்பது பெண்களுக்கு வளர்ந்து வரும் இத்துறையிலுள்ள வியப்பூட்டும் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் விளக்கமளிப்புகளையும் வழங்கி வருகின்றார்.  

‘யாழ்ப்பாணத்தில் ஜெட்விங் ஆரம்பிக்கப்பட்டமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் மிக வேகமாக இந்நிலைக்கு உயர்வடைந்துள்ளேன். இத்துறை தொடர்பான அறிமுகம் ஏனைய இளைஞர்களுக்கு வழங்கப்படுவதையிட்டு மிகவும் பெருமையடைகின்றேன். இவ்வகையான தொழிலின் உண்மைத்தன்மையும், பிரமிப்பூட்டும் மக்கள், தொழில்புரியும் இடங்கள் தொடர்பில் இந்த இளைஞர்கள் அறிந்து கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக அளப்பரிய உறுதிப்பாடும், சிரமமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது வெறும் தொழில் அல்ல. இதுவொரு அருமையான தொழிற்துறையாகவுள்ளதுடன், இதனை நான் இளைஞர்களுக்கு உறுதியாக பரிந்துரைக்கின்றேன்’ என சகிலா தெரிவித்தார்.   

ஜெட்விங் டிராவல்ஸ்ஸின் முகாமைத்துவ தலைவியும், TSC இன் பிரதி தலைவியுமான ஷிரோமல் குறே, ‘ஜெட்விங் மூலம் ஏற்கெனவே இத்துறையில் ஐந்து பொது முகாமையாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய துறைகளைக் காட்டிலும் பெண்களின் பங்களிப்பு மூன்று மடங்கு அதிகமாக கொண்டிருக்கும் வலுவான தொழில் ஸ்தாபனங்களில் ஒன்றாக ஜெட்விங் காணப்படுகிறது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X