Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த எட்டு வருட காலமாக யாழ்ப்பாண பிராந்தியத்தில் இயங்கி வரும் ESOFT, சில தினங்களுக்கு முன்னர் தனது பட்ட மேற்படிப்பு கற்கைகளை தொடர்வதற்கான பட்டப் படிப்பு பிரிவை திறந்து வைத்திருந்தது.
இந்நிகழ்வில் ESOFT மெட்ரோ கம்பஸ் குழும முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. தயான் ராஜபக்ஷ, நிஷான் செம்புசுட்டிஆரச்சி (பிரதம நிறைவேற்று அதிகாரி - ESOFT மெட்ரோ கம்பஸ்), ஹர்ஷ ரவீந்திர (உதவி முகாமையாளர் - கிளை செயற்பாடுகள் - ESOFT மெட்ரோ கம்பஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
லண்டன் மெட்ரொபொலிடன் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து ESOFT மெட்ரோ கம்பஸினால் 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பட்ட மேற்படிப்பு கற்கைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது இந்தக் கற்கைகள் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் நீடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பட்ட மேற்படிப்பு கற்கைகளினூடாக, மாணவர்களுக்கு மென்பொருள் பொறியியலில் BEng (Hons) கற்கை, வணிக முகாமைத்துவத்தில் BA (Hons) கற்கை ஆகியவற்றைத் தமது சொந்த நகரத்திலிருந்தவாறே தொடர முடியும்.
இலங்கையில் இயங்கும் பாரிய தனியார் துறை உயர் கல்விச் சேவைகளை வழங்கும் வலையமைப்பான ESOFT, தன்வசம் 40 நிலையங்களை கொண்டுள்ளதுடன், ஒவ்வோர் ஆண்டும் 30,000 மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது முதல், உயர் தரம் வாய்ந், கற்கைகளை வழங்குகின்றமைக்காக நற்பெயரை கொண்டுள்ளது. சான்றிதழ் கற்கை முதல் பட்டப்பின்படிப்பு வரை கணினி, வணிகம், விருந்தோம்பல், பொறியியல், மொழிப் பயிற்சி, பிரத்தியேக மற்றும் நிபுணத்துவ விருத்தி போன்ற பிரிவுகளில் கற்கைநெறிகள் வழங்கப்படுகின்றன.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago