Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
S.Sekar / 2022 செப்டெம்பர் 30 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 முதல் அரையாண்டு காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி சிறந்தி நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சவால்கள் நிறைந்த சந்தைச்சூழலில் இயங்கிய போதிலும், பிரதான பிரிவுகளில் நிறுவனம் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. 2022 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஆறு மாத காலப்பகுதிக்கான இடைக்கால நிதி அறிக்கையின் பிரகாரம், தேறிய வழங்கிய கட்டுப்பணம் மற்றும் வரிக்கு முந்திய இலாபம் முதல் முதலீட்டு வருமானம் மற்றும் செலுத்தப்பட்ட உரிமை கோரல்கள் வரையிலான சகல பிரதான பிரிவுகளிலும் முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தேறிய வழங்கிய கட்டுப்பணம் 15 சதவீதத்தினால் அதிகரித்து ரூ. 7.52 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 6.54 பில்லியனாக பதிவாகியிருந்தது. வழமையான புதிய வியாபார கட்டுப்பணங்கள் மற்றும் வருடாந்த புதுப்பிப்பு கட்டுப்பணங்கள் போன்றவற்றில் இரட்டை இலக்க வளர்ச்சியினூடாக இந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்ய முடிந்திருந்தது. துறையின் சிறந்த ஐந்து செயற்பாட்டாளர்கள் வரிசையில் வழமையான புதிய வியாபார கட்டுப்பண வளர்ச்சி வீதத்தில் இரண்டாமிடத்தை நிறுவனம் பதிவு செய்திருந்தது. 8 சதவீதமாக பதிவாகியிருந்த இந்தப் பெறுமதி, துறையின் சராசரி பெறுமதியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு அதிகமாகும். வருடாந்த புதுப்பிப்பு கட்டுப்பணங்கள் பிரிவில் இரண்டாவது உயர் வளர்ச்சிப் பெறுமதியை எய்தியிருந்தது. 18 சதவீத உயர்வை பதிவு செய்திருந்த இந்தப் பெறுமதி, இது துறையின் சராசரியை விட உயர்வானதாக காணப்பட்டது.
தேறிய வழங்கிய கட்டுப்பணப் பெறுமதியும் ரூ. 6.1 பில்லியனிலிருந்து ரூ. 7 பில்லியனாக அதிகரித்திருந்தது. நீண்ட கால ஆயுள் காப்புறுதி வியாபாரங்களினூடாக நிறுவனத்தின் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. தொழிற்துறை பெரும்பாலும் ஒற்றை தவணைக் கட்டண வியாபார வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், நிறுவனத்தினால் மொத்தமாக ரூ. 2.2 பில்லியன் உரிமை கோரல்கள் செலுத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 1.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீத அதிகரிப்பாகும்.
வரிக்கு முந்திய இலாபத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. ரூ. 462 மில்லியனிலிருந்து ரூ. 614 மில்லியனாக 33 சதவீதம் உயர்ந்திருந்தது. வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 402 மில்லியனிலிருந்து ரூ. 480 மில்லியனாக உயர்ந்திருந்தது. இக்காலப்பகுதியில் முதலீட்டு வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமை காரணமாக இந்த இலாப வளர்ச்சி பெறப்பட்டிருந்தது. தேறிய முதலீட்டு வருமானம் 19 சதவீதத்தினால் அதிகரித்து ரூ. 2.64 பில்லியனிலிருந்து ரூ. 3.13 பில்லியனாக அதிகரித்திருந்தது. உயர் வட்டி வீதத்துடனான சூழல் மற்றும் முதலீட்டு தந்திரோபாயத்தில் கவனம் செலுத்தியிருந்தமை போன்றன இதில் பங்களிப்புச் செலுத்தியிருந்தன. மொத்த தேறிய வருமான வளர்ச்சி ரூ. 9.10 பில்லியனிலிருந்து ரூ. 9.47 பில்லியனாக எல்லையளவில் உயர்ந்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் பெருமையடைந்திருந்தார். நெருக்கடியான பொருளாதாரச் சூழல் காணப்பட்ட போதிலும், நிறுவனம் தந்திரோபாயமாக செயலாற்றி, தொழிற்துறையின் முன்னோடி எனும் தனது ஸ்தானத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. இந்த சாதனையை பதிவு செய்வதில் பங்காற்றியிருந்த அனைத்து அணியினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago