2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ், யூனியன் வங்கி பங்காண்மை கைச்சாத்து

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கியுடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளை விஸ்தரிக்க முன்வந்துள்ளது. வங்கியின் பரந்தளவு வாடிக்கையாளர் வலையமைப்புக்கு, ஆயுள் காப்புறுதி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு இதனூடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, கொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இரு நிறுவனங்களையும் சேர்ந்த பெருமளவான நபர்கள் கலந்து கொண்டனர்.  

நாட்டின் ஆயுள் காப்புறுதித்துறையில் உறுதியான நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன், புத்தாக்கமான, ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வெவ்வேறு வாழ்க்கைமுறைகளுக்கு பொருத்தமான வகையில் வழங்கி வருகிறது. 30 வருடங்களுக்கு மேலாக இயங்குவதனூடாக நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள அனுபவத்தினூடாக இலங்கையில் ஆயுளை பாதுகாத்து பேணுவதற்கான நிலையை வழங்கியுள்ளது.  

யூனியன் அஷ்யூரன்ஸின் பாங்கசூரன்ஸ் விநியோக பிரிவானது, கடந்த காலங்களில் பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், தற்போது 500க்கும் அதிகமான வங்கி கிளைகளினூடாக சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டின் முன்னணி ஐந்து வங்கிகள் இதற்காக யூனியன் அஷ்யூரன்ஸுடன் கைகோர்த்துள்ளன. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக, யூனியன் பாங்கசூரன்ஸ் சேவைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு பெருமளவான நபர்களைச் சென்றடையக்கூடியதாக இருக்கும்.  

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் களத்தில் முன்னோடி எனும் வகையில், இந்தப் பங்காண்மையினூடாக வங்கியுடன் உறுதியான கூட்டாண்மை உறவை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும். பரந்தளவு வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு உதவுவதாக அமைந்திருக்கும் என்பதுடன், சிறந்த ஆயுள் காப்புறுதி தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதுடன், சென்றடையாதச் சந்தைகளில் புதிய உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக அமைந்திருக்கும். தொடர்ச்சியாக மெருகேற்றமடைந்து வரும் எமது தயாரிப்பு இலாகா மற்றும் சேவை மாதிரிகளினூடாக புதிய நியமங்களை எய்த முடியும் என்பதுடன், இரு நிறுவனங்களுக்கும் அவற்றின் பங்காளர்களுக்கும் உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.  

இந்த பங்காண்மை பரஸ்பர அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் என்பதுடன், யூனியன் வங்கிக்கு ஒரே கூரையின் கீழ் நிதித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும். யூனியன் அஷ்யூரன்ஸுக்கு பரந்தளவு வாடிக்கையாளர்களை சென்றடைந்து துறையின் சிறந்த வாடிக்கையாளர் சேவை நியமங்களை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X