2025 ஜூலை 24, வியாழக்கிழமை

யூனியன் வங்கி பண்டாரவளை கிளை திறப்பு

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யூனியன் வங்கி, ஊவா மாகாணத்தில் தனது பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன், இல. 348, பதுளை வீதி, பண்டாரவளை என்ற முகவரியில் தனது 67ஆவது கிளையை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. 

நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகுந்த பங்களிப்பை வழங்கியவாறு, மேலும் வலுச்சேர்க்கும் விவசாய சமூகத்தாரின் பங்களிப்புடன் இயங்கும் பண்டாரவளை பிராந்தியத்திலுள்ள பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்கள், உயர் தரமிக்க தேயிலையை உலக சந்தைக்கு அளிப்பதுடன், அழகு மிகுந்த சுற்றியல் பிரதேசங்களின் வனப்பு காரணமாக, சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடம் என்ற வகையில், உல்லாசப்பயணத்துறைக்கும் சிறப்பான பங்கை வழங்குகின்றது. 

பண்டாரவளையில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளையானது, யூனியன் வங்கியின் புதிய மற்றும் செயற்றிறன் மிகுந்த சேவைக்கு உதாரணமாக திகழவுள்ளது. அதன் அதிநவீன வசதிகள் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில் அமையப்பெற்றுள்ள இந்தக் கிளை, மீள் நிர்ணயிக்கப்பட்ட வங்கி அனுபவத்தை சிறந்த சௌகரியம் மற்றும் பயனாளர்களுடன் ஈடுபாடு மிகுந்த வகையில் அளிக்கின்றது. 

யூனியன் வங்கியின் பண்டாரவளை கிளை, தொழில்முனைப்பாளர்கள், தொழிற்றுறை நிபுணர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் என அனைவரும் அனுகூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக வங்கியியல் ஆலோசனை சேவைகளையும், ஆலோசனை சேவைகளையும் தருகின்றது.  

இந்த புதிய கிளையானது, நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள், சிறுவர் சேமிப்புக் கணக்கு, NRFC/RFC கணக்குகள், நிலையான வைப்புகள், வீட்டுக்கடன்கள், தனிப்பட்ட கடன்கள், அடகுச்சேவை, ரெமிட்டன்ஸ் மற்றும் விசா சர்வதேச டெபிட் அட்டைகள் உள்ளிட்ட சில்லறை வர்த்தக வங்கியியல் சேவைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒன்லைன் வங்கியில் தளம் ஆகியவற்றுடன், LankaPay common ATM switch ஊடாக இணைக்கப்பட்ட 4000 ATMகள் ஊடாக விஸ்தரிக்கப்பட்ட ATMவலையமைப்பையும் அளிக்கின்றது. நவீனம் மற்றும் சௌகர்யத்தை ஒருங்கே அளிக்கும் யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதோர் தற்போது, வங்கியின் புத்தம்புதிய மொபைல் வங்கியியல் அப்ளிக்கேஷன் இனை பயன்படுத்த முடியும். ஏராளம் வங்கியியல் மற்றும் வாழ்க்கைப்பாணி சேவைகளை இந்த appஆனது Android மற்றும் Apple திறன்பேசிகளினூடாக உள்ளங்கைகளில் அளிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .