2025 ஜூலை 26, சனிக்கிழமை

ரத்ன அப்பியாசக்கொப்பிகள் மீள அறிமுகம்

Gavitha   / 2017 மார்ச் 08 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்ன புத்தக வெளியீட்டு நிறுவனம், “ரத்ன அப்பியாசக் கொப்பிகளை” புதிய மெருகேற்றத்துடன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்வில், நாட்டின் முன்னணி புத்தக விற்பனை நிலையங்களான எம்.டி.குணசேன, சரசவி, சதீபா, விஜித யாபா, சமுத்ரா மற்றும் ஜெயா போன்றன பங்குபற்றியிருந்தன.  

இந்தப் புதிய ரத்ன அப்பியாசக் கொப்பிகள் அறிமுக நிகழ்வு, ரத்ன புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமாரி குணரட்ன அவர்களின் பங்குபற்றலுடன், கொழும்பு 7இல் அமைந்துள்ள குதிரைப் பந்தையத் திடலில் அமைந்துள்ள புரோமேட் காட்சியறையில் வைபவ ரீதியாக நடைபெற்றது.

இந்த வைபவத்தில், ரத்ன புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷனில் செனரத், பிரின்ட் எக்செல் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நளிந்த ஜயமான்ன, எம்.டி.குணசேன புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரஜீவ் குணசேன, விஜித யாபா புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் லலனா யாபா, சரசவி புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரேமா பின்னவல, சதீபா புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வன்னியச்சி, சமுத்ரா புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் மற்றும் ஜெயா புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் ரத்ன அப்பியாசக் கொப்பிகள் விநியோகிக்கும் அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர். இதன் போது ரத்ன புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமாரி குணரட்ன அவர்களால், நாட்டின் முன்னணி புத்தக விற்பனையாளர்களின் முன்னிலையில் மெருகேற்றம் செய்யப்பட்ட ரத்ன அப்பியாசக் கொப்பிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.  

அறுபது ஆண்டு காலமாக, தேசத்தின் குழந்தைகளுக்கு எழுத்துப்பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ள பெருமளவு பக்கபலமாக அமைந்துள்ள ரத்ன புத்தக வெளியீட்டு நிறுவனம், ரத்ன அப்பியாசக் கொப்பிகளை, குழந்தைகளுக்கு மிகவும் மனங்கவர்ந்த சுடின்-மாடின், டோரா, ஜங்கள் புக், நின்ஜா டேர்டில் போன்றன பிரபல்யம் வாய்ந்த கார்டூன் நட்சத்திரங்களின் உள்ளடக்கத்துடன் அறிமுகம் செய்துள்ளது. அது மட்டுமின்றி, புதிய ரத்ன அப்பியாச கொப்பிகள், குழந்தைகளைக் கவரும் பல வர்ணங்களில் காணப்படுகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரத்ன அப்பியாசக் கொப்பிகளில், வெளி மட்டைகள் மட்டுமின்றி, உள்ளக கடதாசிகளும் தூய்மையாகவும், எழுத்தாற்றலை ஊக்குவித்து, குழந்தைகளைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X