2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

ரியல் எஸ்டேட் மொபைல் app ஆன Prime Edge அறிமுகம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

Prime Group தனது மொபைல் செயலியான Prime Edge ஐ அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது, மேலும் இலங்கையின் ரியல் எஸ்டேட் கட்டமைப்பில் புதிய யுகத்தை கட்டியெழுப்பும் வகையில் இந்த அறிமுகம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் முதலாவது சர்வாம்சங்களும் பொருந்திய ரியல் எஸ்டேட் மொபைல் app ஆக அமைந்துள்ள Prime Edge, சொத்துகள் பயணத்தை சீரமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற சௌகரியம் மற்றும் புத்தாக்கத்தை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

Prime Group இன் சந்தைத் தலைமைத்துவத்தை உறுதி செய்வதாக Prime Edge அமைந்துள்ளதுடன், இலங்கையின் சொத்துக்கள் துறையினுள் டிஜிட்டல் புத்தாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் அணுகச் செய்வதில் பரந்தளவு சமூகங்களுக்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது. மேலும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஆதரவளித்தல் போன்ற நிறுவனத்தின் நோக்கங்களுடன் பொருந்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதுடன், தற்போதும் ஆரம்ப நிலைப் பகுதியில் காணப்படும் சூழலில், தொழில்னுட்ப – திறன் படைத்த கட்டமைப்புகள் சொத்துகள் சந்தையில் பிரவேசித்துள்ள நிலையில், Prime Edge இன் பொருத்தப்பாடு மேலும் வலுவடைந்து, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் மற்றும் தொழிற்துறை செயற்பாடுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

Prime Group இன் உறுதியான உள்ளக தகவல் தொழில்னுட்ப பிரிவின் தொழில்னுட்ப புத்தாக்க வடிவமைப்பாக Prime Edge அமைந்துள்ளதுடன், பிரதம தகவல் தொழில்னுட்ப அதிகாரி ரசிக உதயங்கவின் வழிகாட்டலில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. இவரின் தலைமையிலான அணியினர், நவீன தொழில்னுட்ப தீர்வுகளை முன்னெடுத்து, நிறுவனத்தை ரியல் எஸ்டேட் தொழில்னுட்பத்தில் முன்னோடியாக வடிவமைத்துள்ளனர்.

Prime Group இன் இணைத் தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “துரித டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் புதுமையான தீர்வுகளை முதலில் சந்தையில் அறிமுகம் செய்வதில் Prime Group பெருமயடைந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Prime Edge மொபைல் App, தொழில்னுட்பத்தை இணைத்து, ஒப்பற்ற பெறுமதி மற்றும் சௌகரியத்தை பெற்றுக் கொடுக்கும் நிறுவனத்தின் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர் அனுபவத்தை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் App முக்கியத்துவம் பெறுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு தகவல் அணுகல், தமது முதலீடுகளை நிர்வகித்துக் கொள்ளல் மற்றும் Prime Group உடன் ஒப்பற்ற வகையில் ஈடுபாட்டைக் கொண்டிருத்தல் போன்றவற்றில் வலுச் சேர்க்கும் வகையிலும் அமைந்திருக்கும்.” என்றார்.

ரியல் எஸ்டேட் துறையில் டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் Prime Group இன் அர்ப்பணிப்புக்கான ஆதாரமாக Prime Edge அமைந்துள்ளது. நவீன தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தி, App இனால் சொத்துக்களை தேடல், கொடுப்பனவு கண்காணித்தல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றை மேற்கொள்ள சிறந்த வாய்ப்பாக உள்ளது. அத்துடன் பாவனையாளர்களுக்கு சொத்துகளை பரிந்துரைத்தல் மற்றும் விற்பனைகள் போன்றவற்றினூடாக பெருமளவு வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த புத்தாக்கமான அங்கத்தினூடாக சொத்துகள் உருவாக்கத்துக்கு புதிய வழிமுறைகளை ஏற்படுத்துவதுடன், இலங்கையருக்கு ரியல் எஸ்டேட் துறையுடன் மேலும் விறுவிறுப்பாகவும், வெகுமதிகள் சார்ந்த முறையிலும் ஈடுபாட்டைக் கொண்டிருக்க வலுவூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

App இன் பாவனையாளர் நட்பான கட்டமைப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான சொத்துக்கள் பட்டியலிடல் மற்றும் சமகாலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சொத்துகள் நிர்மாணத்திட்டங்கள் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் முடியும். Prime Edge மூலம் வாடிக்கையாளர்களுக்கு தமது கொடுப்பனவு அட்டவணைகள், நிர்மாணத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்வரும் நிலுவைத் திகதிகள் பற்றிய அறிவிப்புகள் போன்றன வழங்கப்படுவதுடன் இது சிக்கல்களற்ற சொத்துகள் முகாமைத்துவ அனுபவத்தையும் வழங்கும். மேலும், App இன் தற்போதைய செயற்பாடு, எதிர்கால புத்தாக்கங்களுக்கான சிறந்த அடித்தளத்தை வழங்குவதுடன், சொத்துகள் பரிவர்த்தனைகள், முதலீட்டு மூலோபாயங்கள் மற்றும் சந்தை அணுகலைப் பெற்றுக் கொடுக்கும்.

Prime Edge ஐ தற்போது டவுன்லோட் செய்து கொள்ள முடியும் மற்றும் இது இலங்கையர்களுக்கு சொத்துக்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஸ்மார்ட்டாக, வினைத்திறனான வழிமுறையை பின்பற்றவும் வசதியை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர் அல்லது முதன்முறையாக கொள்வனவு செய்பவருக்கு Prime Edge என்பது, எளிமையான மற்றும் தகவல்கள் நிறைந்த ரியல் எஸ்டேட் அனுபவத்தை வழங்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X