2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் 2023 நிறைவு

Freelancer   / 2023 செப்டெம்பர் 29 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், ரிட்ஸ்பரி, 34ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் 2023 போட்டிகள், அண்மையில் இரத்மலானை விமானப் படை ஸ்கொஷ் திடலில் பூர்த்தியடைந்ததாக அறிவித்துள்ளது.

தேசிய மட்டத்தில் ஸ்கொஷ் போட்டிகளின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புக் ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வரும் ரிட்ஸ்பரி, தொடர்ச்சியான 15 வருடங்களாக இந்த பெருமைக்குரிய சம்பியன்ஷிப் போட்டிகளின் நம்பிக்கையை வென்ற அனுசரணையாளராகத் திகழ்கின்றது. செப்டெம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த ஆண்டின் நிகழ்வின் போது, 450 தனிநபர் பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பங்குபற்றுநர்களில் 40% அதிகரிப்பு பதிவாகியிருந்தது. ஆறு வயதுப் பிரிவுகளில் இளம் ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர். 9, 11, 13, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

ஆண்கள் பிரிவில் கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் நெவிந்து லக்மன் கனிஷ்ட தேசிய சம்பியன் பட்டத்தை வென்றார். றோயல் கல்லூரியின் செஹாத் பெரேரா இரண்டாமிடத்தையும், ரோயல் கல்லூரியின் மதீஷ விஜேசேகர மூன்றாமிடத்தையும் பெற்றனர். பெண் பிரிவில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் சனித்மான சினாலே கனிஷ்ட தேசிய சம்பியன் பட்டத்தையும், அதே பாடசாலையின் தேமினி பள்ளியகுரு இரண்டாமிடத்தையும் பெற்றார்.

“வருடாந்த ஸ்கொஷ் நாட்காட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த இளம் வளர்ந்து வரும் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் களமாக இது அமைந்திருந்தது. ஆரம்பகட்டத்தில் இந்த விளையாட்டை மேம்படுத்துவதில் ரிட்ஸ்பரி காண்பித்திருந்த அர்ப்பணிப்பில், மாவட்ட மட்ட ஊக்குவிப்புகள் முக்கிய பங்காற்றியிருந்தன. இதனால் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. அடுத்த தலைமுறை ஸ்கொஷ் சம்பியன்களை உருவாக்க முடிந்தது.” என இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்தின் தலைவர் தம்மிக விஜேசுந்தர குறிப்பிட்டார்.

சிபிஎல் ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக இலங்கையில் ஸ்கொஷ் விளையாட்டை மேம்படுத்துவதற்கு ரிட்ஸ்பரி தொடர்ச்சியாக ஆதரவளித்திருந்தது. விளையாட்டில் ஈடுபாடு அதிகரிப்பதை கண்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், விளையாட்டு வீர, வீராங்கனைகள் சிறந்த முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டின் சம்பியனின் பெறுபேறுகள் இதற்கு சான்றாக அமைந்துள்ளது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X