2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

லா ட்ரோப் பிஸ்னஸ் ஸ்கூலின் புலமைப் பரிசில்கள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் லா ட்ரோப் யூனிவர்சிற்றியின் (LTU)  லா ட்ரோவ் பிஸ்னஸ் ஸ்கூலின் (LBS) தலைவரான பேராசிரியர் போல் மாதர் தலைமையிலான சிரேஷ்ட பிரதிநிதிகள் குழு, பல்வேறு கல்வித் திட்டங்கள் மூலம் இரு நாடுகளினதும் மாணவர்களுக்கு புதிய மேம்பட்ட சந்தர்ப்பங்களை உருவாக்கும் நோக்கத்தில் இலங்கைக்கு மீண்டும் விஜயம் செய்துள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் உறவுகளை மேலும் அபிவிருத்தியடையச் செய்வதும் அவர்களது நோக்கமாகும்.  

பேராசிரியர் போல் மாதர் கருத்து வெளியிடுகையில், “லா ட்ரோப் பல்கலைக்கழகத்தின், எமது பிராந்தியத்திலுள்ள முக்கிய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியும் இரு நாடுகளினதும் மாணவர்களுக்கு அதிகரித்த சந்தர்ப்பங்களைத் தொடர்ந்து வழங்கும் திட்டமும் இவ் வருடமும் எங்களை இலங்கைக்கு விஜயம் செய்ய வைத்துள்ளது. எமது புதிய வழங்கல்களும் புலமைப் பரிசில்களும் லா ட்ரோப் பிஸ்னஸ் ஸ்கூல் இன் நிபுணத்துவத்தினது உச்சக்கட்ட நன்மையை இலங்கை மாணவர்கள் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கும்” என்று கூறினார்.  
உலக பல்கலைக்கழகங்களின் சமீபத்திய கல்வித் தரப்படுத்தல் வரிசையில் லா ட்ரோப் பல்கலைக்கழகம் 200

இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளது. உலகின் 336ஆவது இடத்தைப் பெற்றுள்ள பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்ட மூன்று சர்வதேச பல்கலைக்கழக தரப்படுத்தல்களில் உலகில் 400 இடத்தினுள் வந்துள்ளதை இது காண்பிக்கிறது என்றும் பேராசிரியர் போல் மாதர் தெரிவித்தார்.  
அவுஸ்திரேலியா, லா ட்ரோப் பிஸ்னஸ் ஸ்கூல் - வர்த்தக இளமாணி/ கணனி விஞ்ஞான இளமாணி, நிபுணத்துவ கணக்கியல் முதுமாணி (CPA அவுஸ்திரேலியா எக்ரென்சன்) மற்றும் வர்த்தக இளமாணி/ சர்வதேச உறவுகள் இளமாணி போன்ற புதிய கல்வித் திட்டங்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச மாணவர்களுக்கென அறிமுகம் செய்துள்ளது.  அவுஸ்திரேலியா, லா ட்ரோப் பிஸ்னஸ் ஸ்கூல், அதிக எண்ணிக்கையான வர்த்தக மற்றும் முகாமைத்துவப் பாடநெறிகளுடன் வர்த்தக பகுப்பாய்வு முதுமாணி கல்வித் திட்டத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்குகிறது.   

அவுஸ்திரேலியா, லா ட்ரோப் பிஸ்னஸ் ஸ்கூல், 2017ஆம் ஆண்டிலிருந்து பட்ட முன்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு சர்வதேச மாணவர்களுக்கு மொத்த கற்கைக் கட்டணங்களின் 15%, 20% மற்றும் 25% தொகையை மீண்டும் ஒரு தடவை வழங்குகிறது. இந்தப் புலமைப் பரிசில்கள் தகைமையை (Merit) அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு, மாணவர்களின் முன்னைய கற்கை நெறி செயற்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட இருக்கின்றன. “முதலில் வருபவருக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் இவை வழங்கப்படும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X