Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்குதாரர்கள் பெறுமதியை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன், இடைக்கால பங்கிலாபப் பங்கொன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் 224 மில்லியன் ரூபாய் செலுத்த நேரிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதக் காலப்பகுதியில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பதிவு செய்திருந்த சிறந்த நிதிப்பெறுபேறுகளைக் கவனத்திற் கொண்டு இந்தப் பங்கிலாபம் வழங்கப்படுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 செப்டெம்பர் 30ஆம் திகதி உள்ளவாறாக, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குழு, தேறிய இலாபமாக 625 மில்லியன் ரூபாய் பதிவு செய்திருந்தது. லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தலைவர் வைத்தியர். சரத் பரணவிதான கருத்துத்தெரிவிக்கையில், “தனது செயற்பாடுகளில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் உறுதியான தொடர்ச்சித்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் நாம் எய்தியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் பெறுபேறுகள் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் கீழ் காணப்படும் சகல பிரிவுகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கைக் காண்பிப்பதுடன், குறிப்பாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது” என்றார். கடந்த காலங்களில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பல சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது.
இவை அனைத்தும் நிறுவனத்தின் இலாபத்தை மேம்படுத்த பங்களிப்பு வழங்கியிருந்தன. அண்மையில் MTQUA சான்றையும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பெற்றிருந்தது. இதன் மூலம் சர்வதேச வைத்தியசாலைகளில் ஒன்றாகவும் திகழச் செய்துள்ளது. மருத்துவ சுற்றுலாப்பயணிகள் மத்தியில் MTQUA சான்று என்பது பெருமளவு வரவேற்பைக் கொண்டுள்ளது.
இது அவர்களுக்கு சிகிச்சை, பராமரிப்பு மற்றும் சேவைகள் போன்றவற்றை சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வழங்குவதாக அமைந்துள்ளது. லங்காஹொஸ்பிட்டல்ஸ், தனது விசேடத்துவம் வாய்ந்த பிரிவுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதுடன், ஏற்கெனவே காணப்படும் பிரிவுகளையும் மெருகேற்றம் செய்துள்ளது. இதன் மூலமாக, விசேடத்துவம் வாய்ந்த, பரிபூரண சிகிச்சைகளை வெவ்வேறு வாடிக்கையாளர் குழுக்களுக்கு பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கும். உதாரணமாக, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பெண்கள் ஆரோக்கிய நிலையத்தினூடாக வெவ்வேறு சுகாதாரப் பராமரிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago