Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 07 , பி.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், தனது இணையத்தளத்தை மீளறிமுகம் செய்துள்ளது. பெருமளவு மெருகேற்றங்கள், டிஜிட்டல் உள்ளம்சங்கள் போன்றவற்றுடன், சுகாதார பராமரிப்பு ஆர்வலர்களுக்கும் நோயாளர்களுக்கும் பயனுள்ள வகையிலான புதிய உள்ளம்சங்களுடன் இந்த இணையத்தளம் மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பது, அலைபேசிகளிலும் இயங்கக்கூடியது என்பதுடன், வெவ்வேறு சாதனங்கள், பிரவுசர்கள் மற்றும் ஒபரேட்டிங் சிஸ்டம்களில் சிறந்த பாவனையாளர் அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. வெவ்வேறு பாவனையாளர் அனுபவங்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
www.lankahospitals.com இணையத்தளத்தை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தலைவர் வைத்தியர். சரத் பரணவிதான, கொழும்பு சினமன் கிரான்ட் ஹொட்டலில் நடைபெற்ற வைபவமொன்றில் அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.
“லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் புதிய இணையத்தளம் என்பது மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்குடன் மெருகேற்றம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இலக்கான, நாட்டை மருத்துவ சுற்றுலா நாடாக மாற்றியமைப்பது என்பதற்கமைய இந்த நடவடிக்கையும் அமைந்துள்ளது. எனவே, இந்த டிஜிட்டல் மேம்படுத்தல் என்பது, லங்கா ஹொஸ்பிட்டல்ஸுக்கு மட்டும் அனுகூலமாக அமையாமல், இலங்கைக்கும் அனுகூலம் பெற்றுக்கொடுக்கும். ஆசியா மற்றும் ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் அதிகளவு எதிர்பார்க்கப்படும் சுகாதாரமையமாக திகழ்வது என்பதற்கமைய வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது” என லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தலைவர் டொக்டர். சரத் பரணவிதான தெரிவித்தார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago