Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
லைக்காவின் ஞானம் அறக்கட்டளை (Lyca’s Gnanam Foundation) மூலம் இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ரூ.40 மில்லியன் பெறுமதி வாய்ந்த வெள்ள நிவாரண உதவிகள் கடந்த வாரம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த அறக்கட்டளை மூலமாக அனுராதபுரம், புத்தளம், மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக இலங்கையின் 9 பிரதேசங்களுக்கு 16 லொறிகளில் உலர் உணவுகள், தண்ணீர், தகரத்தாள்கள், சிறுவர்களுக்கான சீருடைகள் மற்றும் புத்தகங்கள் அடங்கிய வெள்ள நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஞானம் அறக்கட்டளை என்பது 2010ஆம் ஆண்டில் அதன் ஸ்தாபகர்களான சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் திருமதி. பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரினால் தமது தாயாரான ஞானாம்பிகை அல்லிராஜா அவர்களின் பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட தர்ம ஸ்தாபனமாக திகழ்கிறது.
இந்த அறக்கட்டளை மூலம் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு சுகாதார பராமரிப்பு, கல்வி, பயிற்சி மற்றும் வீடமைப்பு போன்றவற்றை வழங்குவதனூடாக தன்னிறைவு மற்றும் நிலைபேறான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளையானது, வவுனியாவிலுள்ள பின்தங்கியவர்களுக்காக அண்மையில 150 வீடுகளை நிர்மாணித்திருந்ததுடன், வட மாகாணத்திலுள்ள சிறுவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி கல்வி சார்ந்த உதவிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .