2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வொக்ஸ்வகன் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், வொக்ஸ்வகன் கார்களைப் பொருத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், 26.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவிருந்த வொக்ஸ்வகன் தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பொது வர்த்தக நிறுவனங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்தார்.

'சர்வதேச ரீதியில் வொக்ஸ்வகன் எதிர்நோக்கியுள்ள இடர்நிலையைக் கவனத்தில் கொண்டு, உடனடியாக இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகவும், ஏற்கெனவே இந்த தொழிற்சாலையை நிறுவுவதற்கு அவசியமான காணி ஒதுக்கீட்டை நாம் மேற்கொண்டுள்ளோம்' என, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

1000cc முதல் 2000cc வரையான வாகனங்களைப் பொருத்துக்கு முன்னர் வொக்ஸ்வகன் தீர்மானித்திருந்ததுடன், இதில் பயணிகள் கார்கள், SUV ரக வாகனங்கள்,  MUV ரக வாகனங்கள் மற்றும் வணிக நோக்கிலான வாகனங்கள் போன்றன அடங்கியிருந்தன.

போலியான விளம்பரப்படுத்தலை மேற்கொண்டிருந்ததாக வொக்ஸ்வகன் நிறுவனத்துக்கு இந்த ஆண்டின் மார்ச் மாதமளவில் அமெரிக்க வர்த்தக சங்கத்தினால் நட்டஈடு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், உலகளாவிய ரீதியில் காணப்படும் விநியோகஸ்த்தர்களுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்க வொக்ஸ்வகன் உடன்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X