Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகப் பொருளாதாரத்துக்குத் தாக்கத்தை விளைவிக்கும் வீதி விபத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியவையாகும். இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 2015ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களுக்கு அமைவாக, 2015ஆம் ஆண்டுக்குள் 39,000க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் நிகழ்ந்துள்ளதுடன், 2,600 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளொன்றுக்கு சராசரியாக 7 பேர் நபர்கள் மரணமடைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. அதிகமானோர், தங்கள் அன்புக்குரியவர்களை அல்லது தங்களது குடும்பத்தைக் காப்பவர்களை இழந்துள்ளனர். இந்தத் துர்பாக்கியமான நிகழ்வை, வீதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளினூடாக உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
கடந்த 12 வருட காலங்களாக, பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆரம்பித்ததன் ஊடாக வீதி பாதுகாப்பை ஊக்குவிப்பதில், இலங்கையின் Caltex வர்த்தக நாம லுப்ரிகன்ஸை தயாரிக்கும் மற்றும் சந்தைப்படுத்தும் செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
வினைத்திறன் மிக்க வீதி பாதுகாப்பு விழிப்புணர்வின் அவசியத்தை அடையாளம் கண்டதுடன், அதனை விளங்கிக்கொண்டு செயற்படுத்துவதற்காக இலங்கைப் பொலிஸ் திணைக்களம், புனித தோமஸ் கல்லூரியின் 82ஆவது குழவினர், தெரண டீவி மற்றும் ஈபிசீ புரொட்காஸ்டிங் மீடியா நெட்வேர்க் என்பவறின் பங்களிப்புடன் “CALTEX நல்லதோர் வீதி, நல்லதோர் விதி” பிரசார நிகழ்ச்சியை மீள ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் வீதிப் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கு 2003ஆம் ஆண்டிலிருந்து கல்டெக்ஸ் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளது. கம்பனி பிரபல்யமான இடங்களில் வீதி நாடகங்களை நடாத்தியதுடன், கொழும்பில் உச்ச போக்குவரத்து நேரங்களில் பயணம் செய்பவர்களுக்கு நெஞ்சைத் தொடும் வீதிப் பாதுகாப்புத் தகவல்களை வழங்குவதற்கு பதாதைகளைப் பயன்படுத்தியது. அத்துடன், நாடுமுழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் அதிகமாக விபத்து நிகழும் இடங்கள் என்பவற்றில் முக்கியமான பாதுகாப்பு தகவல்களைக் கொண்ட கல்டெக்ஸ் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், வருடம் முழுவதிலும் வீதிப் பாதுகாப்புக்குப் பலமான தாக்கத்தைச் செலுத்தின.
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து செவ்ரோன் லுப்ரிகன்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனம் பிரதான வீதி பாதுகாப்பு விழிப்பணர்வுக்கான “Caltex Road Star” நிகழ்ச்சித்திட்டம் 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், CALTEX, “நல்லதோர் வீதி, நல்லதோர் விதி” நிகழ்ச்சித்திட்டம், 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .