Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாதவியல் தொடர்பான நோய்கள் அதிகரித்துக் காணப்படும் நிலையில், சுகாதாரத்துறையில் இந்த நோய் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றகரமான நிலைகள் தொடர்பில் நாடுகளிடையே அறிவு பகிர்வை மேற்கொள்ள வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு, MARKSS ஹெல்த்கெயார் (பிரைவெட்) லிமிட்டட், சாங்ஹாய் நகரின் 3S Bio பார்மசியுட்டிகல் குரூப் உடன் இணைந்து வாதவியல் நிபுணர்கள் மத்தியில் அறிவு பகிர்வு செயலமர்வை ஏற்பாடு செய்ய முன்வந்திருந்தன.
இதில் இலங்கை வாதவியல் மற்றும் புனருத்தாரண கல்வியகத்தின் நிபுணர்கள் மற்றும் சீனாவின் வாதவியல் சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த முதல் அறிவு பகிர்வு செயலமர்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இதில் சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஐம்பது முன்னணி வாதவியல் நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை மருத்துவர் கல்வியகத்தின் தலைவரும், இதில் இலங்கை வாதவியல் மற்றும் புனருத்தாரண கல்வியகத்தின் தலைவருமான வைத்தியர். நிஹால் குணதிலக கருத்து தெரிவிக்கையில், அறிவு பகிர்வு செயலமர்வை ஏற்பாடு செய்தமைக்காக இரு நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். வாதவியல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை வழங்கும் முறைகளில் தற்போது பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சாங்ஹாய் ரென்ஜி வைத்தியசாலையின் வாதவியல் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர். ஷூவாங் யெ சீனாவில் பின்பற்றப்படும் வாதவியல் சிகிச்சை முறைகள் பற்றிய விளக்கமொன்றை வழங்கியிருந்தார். இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்களையும் இந்தப் புதிய நுட்ப முறைகள் பற்றி அறிந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்திருந்தார்.
மூட்டுவாதம் தொடர்பில் உயிரியல் பாதுகாப்பு முறைகள் பற்றி சீனாவின் பெகிங் யூனியன் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையின் மருந்துப்பொருட்கள் பேராசிரியரான வைத்தியர். சின்பாங் டியான் தனது பரந்தளவு அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.
3S Bio பார்மசியுட்டிகல் குழுமத்தின் உள்நாட்டு பங்காளராக MARKSS ஹெல்த்கெயார் (பிரைவெட்) லிமிட்டட் திகழ்வதுடன், இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரஜீவ் நானயக்கார குழுமியிருந்தோர் மத்தியில் உரையாற்றுகையில், சீனாவின் தூதுக்குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்திருந்தார்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025