Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலவச தகவல் பரிமாற்றம் மற்றும் HD தரத்திலான தொலைபேசிச் சேவை என்பனவற்றை வழங்கும், முன்னணி நடமாடும் தொலைத் தொடர்புப் பிரயோக முறையான வைபர், இலங்கையின் பிரபல இசைக் கலைஞர் இராஜ் வீரரட்ண வைபர் பொது உரையாடல் பிரிவில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இராஜ் பற்றி பல தகவல்களை இதனூடாக அவரது ரசிகர்கள் பெறக் கூடியதாக இருக்கும்.
இராஜ், சிங்கள இசைக் கலைஞரும், இசைத் தயாரிப்பாளரும், பாடகரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இலங்கையின் இசைத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் என்று விமர்சகர்களால் வர்ணிக்ககப்படுபவர். சர்வதேச கீர்த்தி பெற்ற சோன் கிங்ஸ்டன், சோவ்லியா போய், RIO, சிங்கி, ட்ருத் ஹேர்ட்ஸ் அன்ட் குரப்ட் ஆகியோர் உட்பட பல கலைஞர்களோடு இணைந்து பணியாற்றிய புகழும், அனுபவமும் கொண்டவர். மிகப் பிரபலமான அவரின் பாடல்களால், தெற்காசிய இசைத்துறையில் அவர் ஊடுருவியுள்ளார். அவரது பிரத்தியேகமான ஒரு நிகழ்ச்சி 'இராஜ் ஒன்லைன்' என்ற பெயரில் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இளைஞர் இசை நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
2014 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட வைபர் பொது உரையாடல், பிரபலங்கள் பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், அவர்களைப் பின்பற்றவும் வழியமைத்துள்ளது. அதேபோல், விளையாட்டு, நவநாகரிகம், இசை, பொழுது போக்கு என பல விடயங்களோடு தொடர்புடைய பிரபலங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், தகவல்களை அனுப்பி அவர்களோடு பரிச்சயமாகவும் இது உதவுகின்றது. வைபர் சேவையில் உள்ள எவரும் தமது தொலைபேசிகள் மூலமாகவோ அல்லது கணினிகள் மூலமாகவோ இந்தச் சேவையைப் பெறலாம். குறுந்தகவல், வீடியோ காட்சிகள், ஸ்டிக்கர்கள் என்பனவற்றை இதில் பயன்படுத்தலாம். பாவனையாளர்கள் இந்தப் பொது உரையாடலில் பங்கேற்க, தமது நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம். அவர்களோடு இதில் உள்ள விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும். மிகவும் பிரபலமான உரையாடல்கள் வைபரின் பொது உரையாடல் இல்லத்திரையில் காட்சிப்படுத்தப்படும். யார் கலந்துரையாடலில் உள்ளார்கள் என்பதையும் மிக இலகுவாக தெரிந்து கொள்ளலாம். அல்லது தாங்களே நேரடியாக ஒரு கலந்துரையாடலைத் தொடரவும் முடியும்.
இங்கு கருத்து தெரிவித்த வைபர் இந்தியாவின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் அனுப்பாவ் நாயர் அவர்கள் 'வைபர் பொது உரையாடலில் இராஜ்ஜின் ரசிகர்கள் அவரோடு தொடர்பு கொள்ளும் வாய்ப்பும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளமை, எமக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்தத் தளத்துக்கு மிகச் சிறந்த ஆற்றல் உள்ளவர்களைக் கொண்டு வர, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வழமையானதோர் அடிப்படையில் இராஜ் பற்றிய பல தகவல்களை அவரது ரசிகர்கள் பெற்றுக் கொள்ள இது வழியமைக்கும்' என்று கூறினார்
இந்த வைபர் பொது உரையாடல் தளத்தில் இணைந்து கொள்ளும் இலங்கையின் முதலாவது பிரபல புள்ளி இராஜ் ஆவார். அவருக்கு ஏற்கனவே மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. 'இவ்வாறான ஒரு சமூக வலையமைப்பில் இணையக் கிடைத்துள்ளமையை இட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். என்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து கொள்ள ஒரு புதிய வழியை இது ஏற்படுத்தியுள்ளது. வைபர் பொது உரையாடல் மூலம் ஒரு சுவாரஷ்யமான பயணத்தை எதிர்ப்பார்த்து உள்ளேன்' என்று இராஜ் கூறினார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago