2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விமான சேவைகளில் பொதிகள் கையாளல் திறன் அதிகரிப்பு

Gavitha   / 2016 மே 15 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015இல் விமான சேவை வழங்குநர்களின் மூலமாக பயணிகள் பொதிகள் கையாளல் திறன் உயர்வடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டிருந்த SITA Baggage Report 2016 அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த அறிக்கையின் பிரகாரம் 2015இல் தவறுதலாக கையாளப்பட்டிருந்த பயணப் பொதிகளின் எண்ணிக்கை 1,000 பயணிகளுக்கு 6.5 பொதிகளாக பதிவாகியிருந்தன. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 10.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. 2003ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அரைப்பங்கையும் விட குறைவானதாக பதிவாகியிருந்தது.

2003ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகளின் எண்ணிக்கை 85 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்த நிலையில், இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பது தொழிற்துறையின் உட்கட்டமைப்பில் பெருமளவு அழுத்தத்தை பிரயோகிப்பதுடன், வளங்கள் மற்றும் பொதிகள் கையாளல் கட்டமைப்பிலும் நெருக்கடியான நிலையை தோற்றுவிக்கின்றன. கடந்த ஆண்டில் சுமார் 3.5 பில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்திருந்தனர். இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்றுறை பயணிகள் பொதிகளை கையாளும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. சர்வதேச ஆகாய பயண சம்மேளனம் (IATA) விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தமது பயணிகளின் ஒவ்வொரு பொதி தொடர்பிலும் பயண நேரம் முழுவதும் முழு அவதானத்தையும் செலுத்துமாறு அறிவுரைகளையும் அழுத்தங்களையும் பிரயோகித்த வண்ணமுள்ளது. 2018 ஜூன் மாதமளவில்IATA இன் தீர்மானம் 753 ஐ விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் முழுமையாக செயற்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. அதாவது ஒவ்வொரு பயண முனையிலும் பயணப் பொதிகள் கண்காணிக்கப்படும்.

SITA இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ‡பிரான்செஸ்கோ வியோலன்டே கருத்து தெரிவிக்கையில், 'அடுத்த மூன்று ஆண்டுகளில் விமான சேவை வழங்கும் நிறுவனங்களில் பொதிகளை கண்காணித்தல் என்பது முக்கிய இடத்தை பிடிக்கும், குறிப்பாக விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தமது கட்டமைப்பை IATA இன் 753 ஆம் தீர்மானத்தின் பிரகாரம் செயற்படுத்தவுள்ளன. இந்தச் செயற்பாட்டின் மூலமாக, பொதிகளை கையாள்வதில் மேலதிக முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

அவர் தொடர்ந்து விவரிக்கையில், 'பயணிகளுக்கு தமது பொதிகளை பார்சலைப் போன்று இலகுவாக இனங்காணக்கூடியதாக இருக்கும் என்பதுடன், விமான பயணங்களில் தாமதங்கள் ஏற்படும் நிலையில் துரிதமாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் உதவியாக அமைந்திருக்கும்' என்றார்.

SITA இன் அறிக்கையில் இனங்காணப்பட்டிருந்த மற்றுமொரு பிரிவாக, சுயசேவை பொதிகள் சேவை என்பது அதிகரித்திருந்தது. 40 சதவீதமான விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தற்போது சுய-பொதி-அடையாளமிடும் வசதியை அவற்றை பதிவு செய்யும் பகுதிகளில் வழங்குகின்றன. 2018இல் நான்கில் மூன்று விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்த முறையை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளில் மூன்றில் ஒரு பங்கினர், இந்த பொதியிடல் சேவையை பயன்படுத்துவர் அல்லது அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர் நிலையம் அல்லது முழுமையாக தன்னியக்க சேவையை 2016இல் பெற்றுக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணத்தின் போது பொதிகள் எவ்வாறு அடையாளமிடப்படுகின்றன என்பதும் மாற்றமடைந்து வருகிறது. கடந்த ஆண்டில், துறையில் மாற்றம் அவதானிக்கப்பட்டிருந்தது. அதாவது, நிலையான இலத்திரனியல் அடையாளங்கள் பதியப்பட்டிருந்தன.

இவற்றின் மூலமாக பயணிகளுக்கு சுயாதீனமாக பயணிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், காத்திருக்க வேண்டிய நேரங்களும் குறைக்கப்படுகின்றன. விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தற்போது பரீட்சார்த்தமாக இதை பயன்படுத்தி வருவதுடன், பயணிகள் தமது விமான சேவை விவரங்களை ஒவ்வொரு பயணத்தின் போதும் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்காக மொபைல் தொலைபேசி ஆப்ளிகேஷனை பயன்படுத்தலாம். வீடுகளில் அச்சிடப்பட்ட பொதி அடையாளங்கள், இது போன்ற அனுகூலங்களை பயணிகளுக்கு வழங்குகின்றன. இவை செலவீனத்தில் குறைந்து காணப்படுவதுடன், பல விமான சேவை வழங்குநர்கள் மூலமாக பயன்படுத்தப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X