Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 29 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பந்தய சாரதிகள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் CEAT Sri Lanka நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவினால், Commando Challenge நிகழ்வு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவால்மிக்க சுப்பர்குரொஸ் பந்தயம், 3 தினங்கள் நடைபெறும் வகையில், இந்த ஆண்டு ஒக்டோபரில் நடத்தப்படவுள்ளது.
2016 ஒக்டோபர் 3 முதல் 5 வரை இடம்பெறவுள்ளதுடன், சுப்பர்குரொஸ் நிகழ்வானது ஒக்டோபர் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மீண்டும் ஒரு முறை மோட்டார் பந்தய நிகழ்வுக்கு அனுசரனை வழங்க CEAT Sri Lanka முன்வந்துள்ளதுடன், 3 ஆவது தடவையாகவும் “CEAT - SRI LANKA’ சுப்பர் தொடருக்கு ஆதரவளிக்கின்றது.
வீரசாகசத்துடன், பந்தய ஓட்டத்தை வழங்கும் ஒரு புத்தாக்கமான எண்ணக்கருவுடன், இலங்கையின் தனிச்சிறப்புமிக்க நிலப்பரப்பினூடாக ஊடறுக்கும் வகையில் இலக்குடனான பயண நிகழ்வு அவதானத்துடன் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இது கண்டியில் இருந்து ஆரம்பித்து, வத்தேகம, செம்புவத்த, லோக்கல் ஓயா, மகியங்கனை, சோரபொரவௌ, மகா ஓயா, தமன, அறுகம்குடா ஆகிய பிரதேசங்களைக் கடந்து சென்று, அண்ணளவாக 566 கிமீ தூரத்தை உள்ளடக்கியவாறு குடா ஓயாவில் நிறைவடையும்.
1ஆவது தினத்தில் கண்டியிலிருந்து உல்கிட்டிய வரையான 166 கிமீ தூரத்தையும், 2 ஆவது தினத்தில் உல்கிட்டியவிலிருந்து அறுகம்குடா வரையான 260 கிமீ தூரத்தையும், 3 ஆவது தினத்தில் போட்டியாளர்கள் அறுகம்குடாவிலிருந்து முடிவு எல்லையான ஊவா குடா ஓயா வரையான 140 கிமீ தூரத்தையும் கடக்க வேண்டும். வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது மாற்றங்கள் இன்றிய விளையாட்டு பாவனை வாகனங்கள் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளதுடன், பெரும்பாலும் வர்த்தகத்துறையைச் சார்ந்தவர்கள், வீரசாகச ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்ற சிலரும் இதில் பங்குபற்றுபவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா குடா ஓயாவில் அமைந்துள்ள கொமாண்டோ படைப்பிரிவின் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள, நாட்டின் மிக நீளமானதும், வேகமானதும் எனக் கருதப்படுகின்ற சவால்மிக்க 1.68 கிமீ தூரம் கொண்ட பந்தயத்திடலில் சுப்பர்குரொஸ் நிகழ்வு 2016 ஒக்டோபர் 9 திகதி இடம்பெறவுள்ளது.
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago