2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விலைக்கட்டுப்பாடுகளைக் கண்காணிக்க புதிய அதிகாரிகள்

Gavitha   / 2017 ஜனவரி 25 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு சந்தையில் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகளைக் கண்காணிக்கும் வகையில் மேலும் அதிகாரிகளை இலங்கை வர்த்தக மற்றும் தொழிற்றுறை அமைச்சு நியமித்துள்ளது. கடந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 62 புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

இதன் மூலமாக, நாடு முழுவதிலும் மொத்தமாக 250 அதிகாரிகள் பணிக்கு காணப்படுவதுடன், 21 மில்லியன் ரூபாயை நுகர்வோரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுக்கின்றனர்.  

தற்போது காணப்படும் கண்காணிப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு, இந்த ஆண்டின் இறுதியினுள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.  

2016ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பினால் 21,819 தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு, 21000 வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 90 மில்லியன் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 33 சதவீத அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X