Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சியபத பினான்ஸ் பிஎல்சி, வெள்ளவத்தையில் அதன் புதிய கிளையை அண்மையில் வைபவ ரீதியாகத் திறந்து வைத்திருந்தது. சியபத பினான்ஸினால் சமீபகாலத்தில் திறந்து வைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையான கிளைகளில், இது 24ஆவது கிளையாகும்.
சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் தனது கிளைகளைச் சக்தி மிக்கதாக்கும் வகையில் கடந்த சில வருடங்களில் முன்னெடுத்த நடவடிக்கைகளில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சம்பத் வங்கியின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரும் சியபத பினான்ஸின் பணிப்பாளர் சபைத் தலைவருமான அரவிந்த பெரேரா, சியபத பினான்ஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ஹேரத் ஆகியோர் இந்தக் கிளை திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்டார்.
இப் புதியக் கிளையில் வெள்ளவத்தையில் வாழும் மக்கள் குத்தகை, வாடகைக் கொள்வனவு, வர்த்தகக் கடன்கள், பிரத்தியேகக் கடன்கள், சுழலும் கடன்கள், ஈட்டுக் கடன்கள், வீட்டுக் கடன்கள், பொற் கடன்கள், தொழிற்சாலைக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புக்கள் உட்பட நிதித்துறை சம்பந்தமான சகலவித நிதித் தேவைகளுக்கும் சியபத பினான்ஸ் நிதி நிறுவனத்தின் மூலம் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவர் அரவிந்த பெரேரா கருத்து வெளியிடுகையில், “சியபத பினான்ஸ் பிஎல்சியின் வெற்றிக்கு மூலகாரணம், தமது வாடிக்கையாளர்களே” என்று அவர் கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “வெள்ளவத்தையில் புதிய கிளையொன்று திறந்து வைக்கப்பட்டதனால், மேலதிக வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதன் அடிப்படையில், இதுவொரு முக்கியமான பெறுபேறாகும்’ என்று கூறினார்.
“சியபத பினான்ஸில் கடமையாற்றும் நாம், எமது சகல நடவடிக்கைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அணுகுமுறை நிலைநாட்டப்படுவதை எப்போதும் நிச்சயித்து வந்துள்ளோம். எமது அடிப்படை நோக்கம், நாம் வழங்கும் சேவைகளில் மிகச் சிறந்தனவற்றை வாடிக்கையாளர்கள் பெறுவதை நிச்சயிப்பதாகும். சியபத பினான்ஸின் வெற்றி, எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலை நாட்டப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .