Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 23 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், செயற்கையான ஹோட்டல் தொடர்களுக்கு அப்பாற்பட்ட இனிமையான விருந்தோம்பல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்க யாழ்ப்பாணத்தின் Fox Resorts முன்வந்துள்ளது.
பிரத்தியேகமான தங்குமிடப்பகுதிகளில் புதிய உள்ளடக்கமாக Fox Jaffna அமைந்துள்ளது.
வட பிராந்தியத்தில் பிரத்தியேகமான புதுமையான தங்குமிட வசதிகளை வழங்க முன்வந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சங்கள், அடையாளத்துடன் நிறுவப்பட்டுள்ள Fox Jaffna, கொக்குவில் பகுதியில், 200 வருடங்கள் பழமையான புராதன இல்லத்தை மெருகேற்றம் செய்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது, இந்தச் சொத்தை விடுதலைப் புலிகள், இராணுவம் ஆகியன முற்றுகையிட்டிருந்தன. விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்தக் கட்டிடத்தை தமது புலனாய்வு தலைமையகமாக பயன்படுத்தியிருந்ததுடன், இந்த வளாகத்தினுள் மூன்று கொங்கிறீட் பதுங்கு குழிகளை அமைந்திருந்தது. இதில் ஒன்றினூடாக யாழ்ப்பாண கோட்டை பகுதியையும், கரையோர பகுதியையும் சென்றடையும் வகையில் அமைந்திருந்தது. இராணுவத்தினரால் இந்த வளாகம் பொறுப்பேற்கப்பட்டதைத் தொடர்ந்து, தமது புலனாய்வு தலைமையகமாகவும் பயன்படுத்தியிருந்தது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், இந்த வளாகம் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போதைய தங்குமிடப் பகுதியாக மீண்டும் பழைய நிலைக்கு மீளமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடும் வகையில், தற்போது காணப்படும் இரு பதுங்கு குழிகளும் கலை அம்சங்கள் நிறைந்த பகுதியாகவும், அருங்காட்சியகமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஜோர்ஜ் கீத், டேவிட் பெயின்டர், ஜஸ்டின் தெரனியாகல மற்றும் பல புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்களின் கலைப்படைப்புகள் இந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உரிமையாளரின் பிரத்தியேக தெரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தக் கலைப் படைப்புகளை தங்குமிடத்தின் வரவேற்புப் பகுதி, படுக்கை அறைப் பகுதி, பொதுப் பகுதிகள் போன்றவற்றில் காண முடியும்.
நகரின் மையப் பகுதியிலிருந்து சில நிமிடங்களில் சென்றடையக்கூடிய வகையில் இந்த வளாகம் அமைந்துள்ளது. விருந்தினர்களுக்கு அமைதியான மற்றும் சாந்தமான அயல் பகுதிகளை அனுபவிக்க முடியும். யாழ்ப்பாணத்துக்கு வியாபார நோக்காகவும், குடும்பத்தாரை பார்வையிட, பகுதிகளைப் பார்வையிடும் வகையிலும் விஜயம் செய்வோருக்கு தங்குவதற்கு மிகவும் பொருத்தமான பகுதியாக அமைந்துள்ளது.
இந்த தங்குமிடத்தின் நீச்சல் தடாகத்துக்கு விருந்தினர்களிடமிருந்து பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளது. தங்குமிடத்தின் பச்சைப்பசேலென பரந்த வெளிப்பகுதியில் இந்த நீச்சல் தடாகம் அமைந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கு குளிர்ச்சியான அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. தங்குமிடத்தின் “Chef” உணவகத்தில் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமான உணவு வகைகளை சுவைத்து மகிழ முடியும்.
இதில் யாழ்ப்பாணத்துக்கே உரிய வகையில் தயாரிக்கப்படும் நண்டுக் கறி, ஆட்டுப் பொறியல், வெண்டிக்காய் குழம்பு, கூழ் மற்றும் மேலும் பல நாவூறும் உலகப் புகழ்பெற்ற உணவு வகைகளை சுவைத்து மகிழலாம்.
கடல் உணவுப் பிரியர்களுக்கு விசேடமான கடல் உணவுத் தெரிவுகளையும் அனுபவித்து சுவைத்து மகிழ முடியும். யாழ்ப்பாணத்தின் விசேடமான பால் ஆப்பம் இங்கு சுடச்சுட பறிமாறப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Fox Jaffna, நூற்றாண்டு காலம் பழமையான வீட்டின் நீண்ட தூர பயணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், சொகுசான விருந்தினர்களுக்கு சௌகரியமான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடக்கின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்த தங்குமிடத்துக்கு மேலாக, கொத்மலையிலும் பல நூற்றாண்டு காலம் பழமையான புகழ்பெற்ற அரசியல்வாதியான காமினி திசாநாயக்க அவர்களின் இல்லத்தை சொகுசான தங்குமிடமாக Mas Villa by Fox Resortsஎனும் நாமத்தில் கொண்டுள்ளது.
மகாவலி கங்கைக்கு முகப்பாக அமைந்துள்ள இந்த தங்குமிடம், சொந்த வனாந்தரப் பகுதி, வனவிலங்கு மற்றும் தாவரவியல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
கரையோர பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தங்குமிடமாக Ranna Beach Villa by Fox Resorts அமைந்துள்ளது. ஏனைய தங்குமிடங்களுடன் ஒப்பிடுகையில் புதியதாக அமைந்துள்ள இந்த பகுதி, தனது சொந்த வரலாற்றை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளது. ஏனைய Fox Resorts தங்குமிடப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மாறுபட்டதாக அமைந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கு சிறந்த சேவைகளையும், மனம்மறவாத அனுபவத்தையும் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago