2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு கிழக்கிலும் ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 27 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்குக்கான ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நிறைவடைந்தன. இலங்கையின் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், வலுவூட்டல், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பரப்புவதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை 81 புள்ளிகளுடன் தெஹியத்தகண்டிய தேசிய பாடசாலை அணி பெற்றுக் கொண்டது. வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயம் 47 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், வேம்படி மகளிர் உயர் கல்லூரி 45 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன. ஆண்கள் பிரிவில், 77.5 புள்ளிகளுடன் பளை மத்திய கல்லூரி சம்பியன் பட்டத்தையும், புனித. சேவியர் ஆண்கள் கல்லூரி 75 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், மானிப்பாய் இந்துக் கல்லூரி 52 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஆண்டின் சிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருது சிவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வி.தெனிஷாவுக்கு வழங்கப்பட்டது. இவர் நீளம் பாய்தலில் 4.83m எனும் இலக்கை எய்தியிருந்தார். அதுபோன்று, ஆண்கள் பிரிவில் ஆண்டின் சிறந்த மெய்வல்லுநருக்கான விருது வங்காலை புனித அன்னம்மாள் கல்லூரியின் ஏ.ரொமெக்சன் லம்பேர்ட்டுக்கு வழங்கப்பட்டது. இவர் நீளம் பாய்தலில் 5.66m எனும் உயர் புள்ளிகளை பதிவு செய்திருந்தார். வடக்கு கிழக்கைச் சேர்ந்த 1000 க்கும் அதிகமான மெய்வல்லுநர்கள் இந்த ஆண்டின் போட்டிகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனத்தின் இலங்கையின் அபிமானம் வென்ற சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரி, இளம் மெய்வல்லுநர்களை ஊக்குவித்து கட்டியெழுப்புவதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் சம்பியன்ஷிப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையை ரிட்ஸ்பரி மேற்கொண்டதுடன், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் போட்டிகளுக்கான ஈடுபாடு, ஆர்வம் மற்றும் வாய்ப்பை வழங்கியிருந்தது.

சிபிஎல் ஃபுட்ஸ் இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து பங்கேற்றிருந்த மாணவர்களின் எண்ணிக்கை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு குறைவாக காணப்பட்டது. இலங்கையின் விளையாட்டுத் துறையில் உள்ளடக்கத்தை ஊக்குவித்து, இந்த சமத்துவமின்மையை இல்லாமல் செய்யும் வகையில், இளம் வீரர்களை ஊக்குவிப்பதற்கு பிராந்திய மட்டங்களில் செல்வதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்படுவதை உணர்ந்தோம். இலங்கையின் ஒவ்வொரு பாகத்தையும் சேர்ந்த ஒவ்வொரு மெய்வல்லுநருக்கும் தமது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது எமது எதிர்பார்ப்பாகும்.” என்றார்.

மேலும், பங்குபற்றலை ஊக்குவிக்கும் வகையில், வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றன இறுதிப் போட்டிக்கு முன்னதாக வழங்கப்பட்டன. இது பிராந்திய மட்டங்களில் வழமையாக இடம்பெறாத ஒரு முறைமையாகும். சம்பியன்ஷிப் நிறைவுக்கு வந்ததும், பெருமைக்குரிய 51ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வெற்றியாளர்கள் பெற்றனர். இலங்கையின் பாடசாலை மட்ட விளையாட்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி நிகழ்வாக இது அமைந்துள்ளதுடன், அடுத்த தலைமுறை மெய்வல்லுநர்களை ஊக்குவிப்பதற்கான அர்ப்பணிப்பை ரிட்ஸ்பரி கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X