2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வட்டியில்லாத மாணவர் கடன் திட்டங்களில் பட்டப்படிப்புகளை வழங்கும் Saegis கம்பஸ்

S.Sekar   / 2021 டிசெம்பர் 17 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிராந்தியத்தில் பிரதான அறிவு மையமாக இலங்கையை மாற்றியமைக்கும் நோக்கில் இயங்கும் Saegis கம்பஸ், தமக்கு விருப்பமான பிரிவில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருத்தமான உயர் கல்வியகமாக அமைந்திருப்பதுடன், இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் (IFSL) கீழ் கல்வி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்க முன்வந்துள்ளது.

2018, 2019 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் வெற்றிகரமாக தமது உயர் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கற்கைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அரச பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு இது சிறந்த மாற்றுத் தெரிவாகவும் அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பட்டப்படிப்புகளில் சந்தைப்படுத்தல், மனித வளங்கள் முகாமைத்துவம் மற்றும் கணக்கீடும் நிதியியலும் போன்றவற்றில் Bachelor of Business Management (Hons) மற்றும் கணனி விஞ்ஞானம், மென்பொருள் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் Bachelor of Science – (BSc (Hons)) பட்டக் கற்கை மற்றும் Bachelor of Information Technology (BIT) ஆகியன வழங்கப்படுகின்றன. இந்தக் கற்கைகள் அனைத்தும் பாடவிதானத்தில் தொழிற்துறையைப் பயிற்சியையும் உள்ளடக்கியுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் இந்தக் கற்கைகளைத் தொடர்வதற்கு, Saegis கம்பஸைச் சேர்ந்த ஆலோசகர்களினால் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டல்கள் மற்றும் ஆதரவு போன்றன வழங்கப்படும். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கல்வி அமைச்சின் இணையத்தளம் 2021 டிசம்பர் 21ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 31 ஆம் திகதி வரை செயலில் இருக்கும். அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் அதிகாரிகள் விண்ணப்பதாரிகளை 2022 பெப்ரவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் நேர்காணலுக்கு உட்படுத்துவர். 2022 ஏப்ரல் மாதம் முதல் IFSL 6ஆம் உள்வாங்கல் கற்கைகளுக்கான கல்வியாண்டு ஆரம்பமாகும்.

பரந்தளவில் அறியப்படும் சகோதர கல்வியக குழுமமான சக்யா கல்விக் குழுமத்தின் வலிமை மற்றும் ஆதரவுடன், பண்டார திசாநாயக்கவின் தூரநோக்குடைய தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் Saegis கம்பஸ், தனது விரிவுரையாளர் குழுவில் சிறந்த கல்விமான்கள் மற்றும் நிபுணர்களை தன்வசம் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் தம்மை அர்ப்பணித்து பணியாற்றுவதுடன், மாணவர்களுக்கு சிறந்த அறிவூட்டும் வகையில் தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் பரந்தளவு கல்வி பயிலும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், கம்பஸ் வளாகத்தில் இலவச WiFi வசதி, நவீன தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், மொழி ஆய்வுகூடம், நூலகம், ஓய்வெடுக்கும் பகுதி, அதிகளவு இடவசதிகளுடன் கூடிய வாயு குளிரூட்டல் வசதிகளுடனான விரிவுரை அறைகள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகள், அதிகளவு இடவசதிகளுடனான உணவகம், லியோ கழகம் மற்றும் ரொடராக்ட் கழகம் போன்ற பல வசதிகள் காணப்படுகின்றன.

மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் இலவச ஆங்கில மொழியறவு வகுப்புகள், பாதுகாப்பான தங்குமிட வசதிகள் மற்றும் இதர தங்குமிட வசதிகள், தொழிற் பயிற்சிகள் மற்றும் இடைக்கால பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பல்வேறு தனிநபர் ஆளுமை விருத்தி நிகழ்ச்சிகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .