Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 11 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் 264ஆவது கிளை, வத்தளை, எந்தேரமுல்லையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இப்புதிய கிளை திறப்பு விழாவில், கொமர்ஷல் வங்கியின் பிரதித் தலைவர் பிரீதி ஜயவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முழு வசதிகளையும் கொண்ட இந்தக் கிளை ATM இயந்திரம், பண மீள்சுழற்சி இயந்திரம் (CRM) என்பன உட்பட வங்கியின் ஏனைய டிஜிட்டல் சேவைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளக் கூடிய, டிஜிட்டல் தளம் ஒன்றையும் கொண்டுள்ளது.
இலக்கம் 291, எந்தேரமுல்லை, வத்தளை என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த வங்கிக் கிளையை வங்கியின் பிரதித் தலைவர் பிரீதி ஜயவர்தன நாடாவை வெட்டித் திறந்து வைப்பதையும் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க மற்றும் உயர் அதிகாரிகள் அருகில் இருப்பதையும் படத்தில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
44 minute ago