2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வருடாந்த நிதி அறிக்கையிடல் சிறப்புக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு கௌரவம்

S.Sekar   / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 56 ஆவது வருடாந்த நிதி அறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றுள்ளது. காப்புறுதிப் பிரிவில் வருடாந்த நிதி அறிக்கையிடலுக்கான வெள்ளி விருதை நிறுவனம் சுவீகரித்திருந்தது. நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சிறந்த ஆளுகை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்றவற்றை ஊக்குவிக்கும் மீண்டெழும் மற்றும் காப்பு நடவடிக்கைகளுக்காக இந்த பெருமைக்குரிய கௌரவிப்பு யூனியன் அஷ்யூரன்சுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த சாதனை தொடர்பில் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “56 ஆவது வருடாந்த நிதி அறிக்கையிடல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் காப்புறுதி நிறுவனங்கள் பிரிவில் வெள்ளி விருதை பெற்றுக் கொள்ள முடிந்ததையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒன்றிணைப்பு போன்றவற்றில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த விருது மீள உறுதி செய்வதுடன், சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் நிதி அறிக்கையிடலில் சிறப்பை பேணியிருந்தமையையும் உறுதி செய்திருந்தது.” என்றார்.

பங்காளர்களின் தகவல் தேவைகளை சிறந்த முறையில் நிவர்த்தி செய்வதற்காக ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல் கொள்கைகள் மற்றும் அடிப்படை உள்ளம்சங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் பின்பற்றுகின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கை, ‘360 of Value’ எனும் நாமத்தில் வெளியிடப்பட்டிருந்தது. நிறுவனத்தின் வெளியக சூழல், தந்திரோபாயம், வள ஒதுக்கீடு, வியாபார மாதிரி, வினைத்திறன், கூட்டாண்மை ஆளுகை மற்றும் கம்பனியின் உள்ளம்சங்கள் போன்றவற்றின் மேலோட்டத்தையும் சுருக்கமான ஆய்வையும் வழங்குவதாக அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .