2026 ஜனவரி 28, புதன்கிழமை

வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய இந்தியா, ஐரோப்பா

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 27 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்பாலான தீர்வைகளை இல்லாமற் செய்யும், இரு வழி வர்த்தகத்தை ஊக்கப்படுத்துவதை இலக்காகக் கொண்ட, வளர்ச்சியடைந்து வரும் பூகோள வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் ஐக்கி அமெரிக்காவைத் தங்கியிருப்பதை குறைக்கும் நீண்ட காலம் தாமதமானமொரு ஒப்பந்தமொன்றை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இன்று ஏற்படுத்தியுள்ளன.

இவ்வொப்பந்தமானது வர்த்தகம் செய்யும் பொருள்களின் மதிப்பின் 96.6 சதவீதத்துக்கான தீர்வைகளைக் குறைப்பதன் மூலம் 4 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய நிறுவனங்கள் தீர்வையில் சேமிப்பதன் மூலம் இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதியை 2032ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாக்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஏழு ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் 99.5 சதவீதத்தில் தீர்வைகளை ஐரோப்பிய ஒன்றியம் குறைக்கவுள்ளது. கடலுணவுப் பொருள்கள், தோல், ஆடை உற்பத்திகள், இரசாயனங்கள், இறப்பர், மூல உலோகங்கள், இரத்தினங்கள், ஆபரணங்களுக்கான தீர்வைகள் பூச்சியமாக்கப்படவுள்ளதாக அறிக்கையொன்றில் இந்திய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயம் தொடர்பான சோயா, மாட்டிறைச்சி, சீனி, அரிசி, பால் பொருள்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து தடுக்கப்பட்டுள்ளன.

சில இந்தியப் பொருள்கள் மீது 50 சதவீத தீர்வைகளை ஐ. அமெரிக்கா விதித்ததுடன், ஐ. அமெரிக்க ஜனாபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்வை அச்சுறுத்தல்கள், அவரின் கிறீன்லாந்தை கைப்பற்றும் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்வினையாற்றிய நிலையில் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்த ஐரோப்பிய ஒன்றிய – இந்திய வர்த்தகப் பேச்சுக்கள் வேகமெடுத்திருந்தன.

யுரேனியம், சக்தி, கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காக  கனேடியப் பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், பிரித்தானியா, நியூசிலாந்து, ஓமானுடன் இந்தியா ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டிருந்தன.

மறுபக்கமாக தென்னமெரிக்க நாடுகள், இந்தோனேஷியா, மெக்ஸிக்கோ, சுவிற்ஸர்லாந்துடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X