2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வளமான வாழ்வுக்கு எல். பீ பினான்ஸ் வழிகாட்டுகிறது

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரை வருடப் பிறப்பை  மக்கள்  இன்னும் குதூகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான எல்.பீ பினான்ஸ், உங்கள் வாழ்க்கைக்கு மேலும் வலுவூட்டக்கூடிய நற்செய்தி ஒன்றை அறிவிக்கிறது. 

நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படும் ‘யசஇசுரு’ என்ற நிலையான வைப்புத் திட்டம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் திகதி முதல், மே 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பதே இந்த நற்செய்தியாகும்.  
எல். பீ பினான்ஸின் நிலையான வைப்புத் திட்டம் சகல வழிகளிலும் நம்பிக்கைக்கு உத்தரவாதமான ஒரு வைப்புத் திட்டமாகும். மிகப் பெரிய வைப்பு மற்றும் சொத்து அடித்தளமும் 46 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அப்பழுக்கற்ற செயற்பாடுகளும் இந்த நம்பிக்கைக்குச் சான்றாகும். 

இதன் காரணமாகவே கடந்த பல்லாண்டுகளில் எல். பீ பினான்ஸின் நிலையான வைப்பு அடித்தளம் தொடர்ச்சியாகவும் பெருமளவிலும் அதிகரித்து வருகின்றது.  

‘யசஇசுரு’ நிலையான வைப்புத் திட்டம், நாடெங்கிலுமுள்ள எல்.பீ  பினான்ஸ் கிளைகளால் நடைமுறைப்படுத்தப்படும். முன்சொல்லப்பட்ட ஊக்குவிப்புக் காலப்பகுதிக்குள் நிலையான வைப்பைச் செய்யும் சகல வாடிக்கையாளர்களுக்கும் சிங்கர் நிறுவனத்தின் வழமையான உத்தரவாதத்துடன் பெறுமதிமிக்க வீட்டுப் பாவனைச் சாதனங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். 

இந்த அன்பளிப்புகளுக்குள் உலர் இஸ்திரிகைகள், மின்சாரக் கேத்தல்கள், தள மின்விசிறிகள், வோட்டர் பிறெஷர் கன்கள், பயணப் பைகள், காஸ் அடுப்புகள், சிங்கர் சலவை இயந்திரங்கள், குளிரூட்டிகள், LED தொலைக்காட்சிகள் என்பன உள்ளடங்கும். 

இவற்றைத் தவிர, தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்படும். எல். பீ பினான்ஸ், அதன் வைப்பாளர்களுக்குக் கவர்ச்சியான வட்டியை வழங்குவதால், ‘யசஇசுரு’ திட்டத்தில் வைப்புச் செய்பவர்கள் வளமான பிரதிபலனைப் பெறுவார்கள்.  

2017ஆம் ஆண்டு நடைபெற்ற Interbrand Best Sri Lankan Brands நிகழ்வில் இலங்கையின் 20 தலைசிறந்த வர்த்தகப் பெயர்களுள் ஒன்றாக எல். பீ பினான்ஸ் தெரிவு செய்யப்பட்டது. 

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு நிதி மற்றும் லீசிங் நிறுவனம் எல். பீ பினான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நிதி மற்றும் லீசிங் சேவைகள் முறையில் எல். பீ பினான்ஸ் முதலிடம் வகிக்கிறது என்பதற்கு இது சான்றாகும். ஃபிச் ரேட்டிங்ஸ் அமைப்பு (A-) என்ற தரப்படுத்தலை வழங்கியிருப்பது நிறுவனத்தின் நிதி உறுதிப்பாட்டை மேலும் எடுத்துக்காட்டுகின்றது. 

எல். பீ பினான்ஸ், கடந்த 46 ஆண்டுகளுக்கு மேலாக, நாடு முழுவதிலும் சகல தரப்பு மக்களுக்கும் தரமுயர்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. 

எல். பீ பினான்ஸால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுள் குத்தகை வசதி, வீடமைப்புக் கடன்கள், கல்விக் கடன்கள், தனிப்பட்ட கடன்கள், தங்கக் கடன்கள், நுண்ணளவு நிதியுதவி, இஸ்லாமிய நிதிச் சேவைகள், வெஸ்டர்ன் யூனியன் பணப் பரிமாற்றம், சிறுவர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக் கணக்குகள் என்பனவும் உட்படும்.  

எல். பீ பினான்ஸ் தனது நிலையான வைப்புத் திட்டத்தை ‘எல்.பீ யசஇசுரு நிலையான வைப்பு’ என்ற பெயரில் இணையற்ற நன்மைகளுடன் மீள அறிமுகம் செய்தது. இப் புத்தாண்டு உற்சவ காலத்ததை ஒட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘எல்.பீ யசஇசுரு’ ஊக்குவிப்புத் திட்டம், மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமென்பதில் ஐயமில்லை. 

மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத்தள முகவரியில் பிரவேசியுங்கள். www.lbfinance.lk.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .