Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , மு.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
Vision Care தமது அனைத்து கிளைகளிலும் கொவிட் - 19 தொற்றுப் பரவலுக்கு எதிராக, உயர்தரமான பாதுகாப்பு, சுகாதாரத்தைப் பேணுவதுடன் தமது வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் என இரு பிரிவினர் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு மன அமைதியை உருவாக்கிடப் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கிளைகளுக்குள் செல்வதற்கு முன்னர், அவர்களது கைகளைச் சவர்க்காரம், நீரைக் கொண்டு கழுவுவதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. பிரதான நுழைவாயிலின் மூலம் உட்செல்ல முன்னர், ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தரால் முன் வாயில் கதவுகள் திறந்து கொடுக்கப்படும். உள்ளே சென்றதும், Vision Care உத்தியோகத்தர் ஒருவர், சிறிய ஆவணம் ஒன்றை நிரப்புவார். அதில், அக்கிளைக்கு வருகை தருவதற்கான காரணம், கடந்த 14 நாள்கள் அவர் இருந்த இடம் என்பவை தொடர்பான விவரங்களைச் சேகரிப்பதாக அமைந்திருக்கும். அவ்வாறு அந்த ஆவணம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், வாடிக்கையாளரின் தேவையின் அடிப்படையில், குறிப்பிட்ட பிரிவுக்கு அனுப்பப்படுவார்.
அனைத்து Vision Care ஊழியர்களும் ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் எவ்வாறு பாதுகாப்பாகத் தொடர்பு கொள்வது என்பது குறித்துச் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் இயன்றளவிலான அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
அத்துடன் எந்நேரத்திலும் சமூக விலகலை பேணுகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு வாடிக்கையாளரது வருகைக்கு முன்னும் பின்னும், அனைத்து உபகரணங்களும் சுத்திகரிக்கப்படுகின்றன. கண் பரிசோதனைகளுக்குப் பின்னர், வாடிக்கையாளர் அடுத்த கட்டமாகத் தங்களுக்கு விரும்பிய பிரேமைத் தெரிவு செய்துகொள்வதற்காக, வாடிக்கையாளர் சேவை உத்தயோகத்தரிடம் அனுப்பப்படுவார். வாடிக்கையாளரால் தெரிவுசெய்வதற்காக முயற்சி செய்து பார்க்கப்பட்ட அனைத்துப் பிரேம்களும் சுத்திகரிக்கப்படுகின்றன. அதேநேரம் கண்ணாடிகள் தொடர்பான மற்றத் தகவல்கள் அனைத்தும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் பெற்றுக்கொடுக்கப்படுகிறது.
அதேபோலவே Audiology பிரிவிலும் வாடிக்கையாளர்கள், பணியாளர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. செவிப்புலனற்றோருக்கான ஒவ்வொரு சாதனமும் வாடிக்கையாளர் காதில் பொருத்துவதற்கு முன்னர் சுத்திகரிக்கப்படுவதுடன், ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் அனைத்து உபகரணங்களும் அக்குறிப்பிட்ட பகுதியும் அடுத்த வாடிக்கையாளரின் வருகைக்கு முன்னர் சுத்திகரிக்கப்படுகின்றது.
கொடுப்பனவின் போது, கிரெடிட், டெபிட் அட்டைகளின் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கப்படுகிறார்கள். காரணம், அதற்கான பாதுகாப்புடன் சகல வசதிகளும் காணப்படுகின்றமையாகும். எவ்வாறாயினும், வாடிக்கையாளர் பணக் கொடுப்பனவை மேற்கொள்ள விரும்பினால், அதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
16 May 2025