Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மாபெரும் சொத்துகள் முகாமைத்துவ நிறுவனமான LankaPropertyWeb.com உடன் இணைந்து வீட்டுக் கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க, செலான் வங்கி முன்வந்துள்ளது.
இந்தக் கைகோர்ப்பினூடாக, சொகுசான சொத்தை எதிர்பார்க்கும் உயர் தேறிய வருமானத்தைக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள், வியாபார தனிநபர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சொகுசான வீடொன்றைக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு செலான் வீட்டுக் கடன் சேவைகளினூடாக முறையான ஆலோசனைகளுடன் சௌகரியமான சேவைகளைப் பெற்றுக்கொடுக்க உதவியாக அமைந்துள்ளது.
இந்தப் பிரத்தியேகமான கூட்டுத் தொழில் முயற்சி தொடர்பில் செலான் வங்கியின் சில்லறை வங்கியியல் பிரிவின் பதில் பொது முகாமையாளர் திலான் விஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களுக்குத் தமது நிதித் தேவைகளுக்கமைய, தமக்குப் பொருத்தமான செலான் வீட்டுக் கடன் தீர்வைத் தெரிவு செய்து கொள்ள, இந்தக் கூட்டு முயற்சி சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. LankaPropertyWeb.com உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
செலான் வங்கி ஒன்லைன் கடன் கணிப்பான் (Online loan calculator) ஒன்றை LankaPropertyWeb.com பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது, இதனூடாக இணையத் தளப் பார்வையாளர்களுக்கு செலான் வீட்டு கடன் சேவைகளையும் இதர அனுகூலங்கள் மற்றும் தவணைக்கட்டணங்கள் பற்றிய விவரங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மேலும், Lanka Property Show 2018 உடன் செலான் வங்கி கைகோர்க்கவுள்ளது. இந்நிகழ்வு கிங்ஸ்பரி ஹோட்டலில் 2018 பெப்ரவரி மாதம் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும்.
Lanka Property Show 2018 பற்றி விஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு Lanka Property Show 2018 நிகழ்வின் போது பல முன்னணிச் சொத்து வடிவமைப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருந்ததனூடாக மாபெரும் நிர்மாணித்த வீடுகள் மற்றும் காணிகள் கண்காட்சிக்காகத் தெரிவாகியுள்ளன. இந்த ஆண்டு, நிகழ்வின் போது, நிர்மாண வீடுகள் மற்றும் காணிகள் பற்றிய பல அம்சங்களும் அடங்கியிருக்கும் என்பதுடன், பெருமளவான பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் அமைந்திருக்கும். வங்கி பங்காளராக, செலான் வங்கி மக்களின் கனவுகளுக்கு வலுவூட்டுவதுடன், சிக்கலில்லாத வகையில் தமது கனவு இல்லங்கள் மற்றும் தொடர்மனைகளைக் கொள்வனவு செய்வதற்கு வழி வகுக்கும் முகமாக அமைந்திருக்கும். செலான் வீட்டு கடன்கள் ஊடாக கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை நாம் வழங்குவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை வழங்குவதில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சேர்த்துள்ளோம். இதனூடாக அவர்களுக்கு சரியான தெரிவையும் தமக்குப் பொருத்தமான கடன் வசதிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.
செலான் வீட்டுக் கடன் ஒன்று ஐநூறாயிரம் ரூபாயிலிருந்து நூறு மில்லியன் ரூபாய் வரையில் அமைந்திருக்கும் (ரூ. 500,000 - ரூ. 100,000,000) இதற்காக ஆகக்குறைந்த ஆவணங்களையே சமர்ப்பிக்க வேண்டும். செலான் வீட்டுக்கடன்களை கவர்ச்சிகரமான 13.25 சதவீதம் எனும் வட்டி வீதத்தில் வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தமது வயது மற்றும் மீளச்செலுத்தக்கூடிய திறன் ஆகியவற்றுக்கமைய 25 வருடங்கள் வரை மீள் கொடுப்பனவுத் திட்டங்களைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.
கடந்த காலங்களில், செலான் வங்கி தனிநபர், கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர், வாடிக்கையாளர்களுக்குப் பரிபூரணமானதும் சௌகரியமானதுமான செலான் வீட்டுக் கடன் சேவைகளை வழங்கியுள்ளது. மேலும், பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த நுண் மற்றும் சிறிய நடுத்தரளவு வியாபார சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.
இதற்காக விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுத்து, பணப்பாய்ச்சல் முகாமைத்துவம் மற்றும் பணி வாழ்க்கைச் சமநிலையின் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தது.
இந்தப் பங்காண்மை ஊடாக, வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய சௌகரியமான தீர்வுகளை வழங்க செலான் வங்கி காணப்பிக்கும் அர்ப்பணிப்பை, மேலும் உறுதி செய்துள்ளது. கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குவதுடன், கட்டமைக்கப்பட்ட மீள் கொடுப்பனவுத் திட்டங்கள் மற்றும் துரிதமான உதவிகளையும் வழங்குகிறது.
மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ள, வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள செலான் வங்கிக் கிளைக்கு விஜயம் செய்யலாம். வங்கியின் ஹொட்லைன் இலக்கமான 011 200 8888 உடன் அல்லது www.seylan.lk இணையத்தளத்துக்கு சென்று விண்ணப்பப்படிவத்தையும் விவரக் கோவையையும் டவுன்லோன்ட் செய்து, செலான் வீட்டுக் கடன் சேவைகள் பற்றிய மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
9 hours ago