Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 14 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதி அரேபியாவின் ‘அரபு நஷனல் வங்கி’யுடன் செலான் வங்கி கைகோர்த்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்பும் சேவையை மேலும் விஸ்தரித்துள்ளது. இந்த கைகோர்ப்பினூடாக TeleMoney சேவைப் பிரிவினூடாக சவுதி அரேபியாவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு இலங்கையின் செலான் வங்கி மூலம் உடனடியாகப் பணத்தை அனுப்பக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இயங்கும் பாரிய 10 வங்கிகளில் ஒன்றாக, ANB தரப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியா முழுவதிலும் கிளைகள் மற்றும் பிரத்தியேகமான TeleMoney பண அனுப்புகை நிலையங்கள் போன்ற பரந்தளவு வலையமைப்பைக் கொண்டுள்ளது. எமது, பெறுமதி வாய்ந்த வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர், தற்போது இந்த நிறுவனங்களில் ஏதேனுமொன்றில் பண அனுப்புகைச் சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். TeleMoney சேவை வழங்குநர் மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் சௌகரியமான வகையில் தமது பண அனுப்புகைகளை மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சவுதி அரேபியாவின் அரபு நஷனல் வங்கியின், TeleMoney பிஸ்னஸ் அலகின் தலைமை அதிகாரி அன்வர் அல் முர்ஷெத் கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கியுடனான இந்தக் கைகோர்ப்பினூடாக, சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, இலங்கையிலுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு இலகுவாகவும் துரிதமாகவும் குறைந்த செலவில் பணத்தை அனுப்பக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
செலான் வங்கியின் செயற்பாடுகளுக்கான பதில் பொது முகாமையாளர் மலிக் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளை, கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக மேம்படுத்தியுள்ளோம். மத்திய கிழக்கில் எமது சேவை விஸ்தரிப்புகளை மேற்கொண்டிருந்தமைக்காக கிடைத்திருந்த நேர்த்தியான வரவேற்பைத் தொடர்ந்து, எமது பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கத் தூண்டியிருந்தது. இதனூடாக மத்திய கிழக்கில் காணப்படும் சிறந்த பண அனுப்புகை அலகுகளை நாம் அணுகியிருந்தோம்” என்றார்.
வெளிநாட்டிலிருந்து பணத்தை அனுப்பும் சேவையை மேலும் விஸ்தரிக்கும் வகையில், செலான் வங்கி தனது SeyCash remittance சேவையை பொது இலத்திரனியல் நிதி பரிமாற்றல் கட்டமைப்பில் (Common Electronic Fund Transfer System (CEFT)) இணைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025