Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ICICI வங்கி லிமிடெட் முன்வைத்திருந்த கோரிக்கையின் பிரகாரம், இலங்கையில் ICICI வங்கியின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, அதன் வணிக வங்கிச் செயற்பாடுகளுக்காக வழங்கியிருந்த அனுமதியை இரத்துச் செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், இலங்கையில் 2020 ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ICICI வங்கியின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் நியதிகள், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்ததைத் தொடர்ந்து, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதியை, ICICI வங்கிக்கு வழங்கியிருந்ததாக நாணய சபை தெரிவித்துள்ளது.
ICICI வங்கி, இலங்கையில் தனது வணிகச் செயற்பாடுகளை 2006ஆம் ஆண்டில் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கையில் தனது செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான அனுமதியை, 2019ஆம் ஆண்டு, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து ICICI வங்கி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
21 minute ago
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
47 minute ago
51 minute ago