Editorial / 2026 மார்ச் 24 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது லயன்ஸ் கிளப்பான கொழும்பு (ஹோஸ்ட்) லயன்ஸ் கிளப் (Lions Club of Colombo Host) மற்றும் கொழும்பு (ஹோஸ்ட்) லியோ கிளப் இணைந்து, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் பாரிய தூய்மைப் பணியொன்றை கடந்த 15 ஆம் திகதி முன்னெடுத்தன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதோடு, கடற்கரைப் பகுதிகளை சுத்தமாகப் பராமரிப்பதன் அவசியத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் நோக்கில், கிளப்பின் 'சுற்றுச்சூழல் அழகுபடுத்தல்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தில் கிளப்பின் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கடற்கரையோரத்தில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஏனைய குப்பைகளைச் சேகரித்தனர். கடல் சார் உயிர்ச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், இலங்கையின் அழகிய கடற்கரைகளை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதன் அவசியத்தையும் இந்தத் திட்டம் வலியுறுத்தியது.
இத்தகைய காத்திரமான முயற்சிகளின் மூலம், கொழும்பு (ஹோஸ்ட்) லயன்ஸ் கிளப் சமூக சேவையிலும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என கிளப் உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.



15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026