S.Sekar / 2021 மார்ச் 10 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, கடுகொடவைச் சேர்ந்த இளம் மாணவியான ஷுக்ரா முனவரை சந்தித்து, அவரின் சாதனைக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, செலான் வங்கி அண்மையில் விஜயம் செய்திருந்தது. சிறந்த எதிர்காலத்தைக் கொண்ட 17 வயது நிரம்பிய மாணவியான இவர், செலான் வங்கியிடமிருந்து தமது எதிர்கால கல்விச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு வழங்கப்பட்ட அன்பளிப்பையிட்டு மிகவும் வியப்படைந்தார்.

மில்லியன் கணக்கான இலங்கையர்களின் உள்ளங்களை ஷுக்ரா தமது அறிவு, ஊக்கமான செயற்பாடு மற்றும் சிறந்த தோற்றப்பாட்டினால் கவர்ந்திருந்தார். இலங்கையின் குறைந்த வசதிகளைக் கொண்ட சிறுவர்களுக்கு கல்வியைத் தொடர உதவிகளை வழங்குவது எனும் அவரின் இலக்குகள் மற்றும் அறிவுக்கான அவரின் ஈடுபாடு போன்றன தேசத்தின் பல சிறார்கள் மத்தியில் அவரை சிறந்த முன்மாதிரியானவராக திகழச் செய்துள்ளது.
ஷுக்ரா தமது சிந்தனைகளை செலான் அணியினருடன் பகிர்ந்து கொள்ளும் போது, “17 வயது நிரம்பிய, எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிறைந்தவளாக, சேமிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிப்பதை பழக்கமாக்கி, அவர்கள் வளரும் போது, அதை அவர்களுக்கும் பழக்கப்படுத்த வேண்டும் என நான் நம்புகின்றேன். அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தில் இந்தச் செயற்பாடு முக்கிய பங்காற்றும் என நம்புகின்றேன்.” என்றார்.
இலங்கையிலுள்ள முன்னணி சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி கணக்கு காணப்படுவதுடன், இளம் மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைவதற்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
7 minute ago
10 minute ago
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
20 minute ago
22 minute ago