Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூர் சந்தையில் பொதி செய்யப்பட்ட நிலக்கடலை விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு 75 மவுண்டன் சைக்கிள்களை பரிசாக வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த உற்பத்தி அறிமுகம் செய்யப்பட்டது முதல், வாடிக்கையாளர்கள் அதன் மீது கொண்டுள்ள உன்னதமான நம்பிக்கைக்கான ஒரு நன்றிக் கடனாகவே இந்தப் பரிசுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 50 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு இது 75 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டம் தொடர்பாகக் காட்டிய ஆர்வமும் அதிகரித்த தேவையுமே பரிசுகள் அதிகரிக்கப்பட முக்கிய காரணமாகும்.
ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ் (நிலக்கடலை) நாட்டில் உள்ள பொதி செய்யப்பட்ட நிலக்கடலை வகைகளுள் முன்னணி நாமமாகும். இந்த ஊக்குவிப்புக் காலம் 2015 ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் அக்டோபர் 25 ஆம் திகதி வரையாகும். சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்கள் வாழும் 146 நகரங்களை உள்ளடக்கியதாக இந்த 60 நாள் ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும்.
இது குறித்து ஸ்கேன் ஜம்போ பீனட்ஸின் வர்த்தக முத்திரை முகாமையாளர் கயான் விஜேதிலக்க கருத்து தெரிவிக்கையில், 'கடந்த பல ஆண்டுகளாக எமது உற்பத்திகளை சுவைத்து எமக்கு ஆதரவளித்துவரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பை வழங்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, எமது உற்பத்தியை ஆதரிக்கும் அவர்களுக்கு நன்றி கூறுவதும் எமது நோக்கமாகும்' என்றார்.
இந்த ஊக்குவிப்பில் வெற்றி பெறும் தகுதியைப் பெற, ஸ்கேன் உற்பத்திகளின் எந்தவொரு வெற்று உறையையேனும், தபால் பெட்டி இலக்கம் 161, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் வாடிக்கையாளர் தனது பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் என்பனவற்றை தவறாது குறிப்பிட வேண்டும். ஒருவர் எத்தனை வெற்று உறைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
உள்ளுர் வாடிக்கையாளர்களின் விருப்பமான சுவை மற்றும் இரசணைக்கு ஏற்ப ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ் பிரத்தியோகமாகத் தயாரிக்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களின் பணப் பைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளைக் கொண்ட பொதிகளில் இது கிடைக்கின்றது. சுகாதாரமான முறையில் பொதி செய்யப்பட்டு இதன் சுத்தம் உறுதி செய்யப்படுகின்றது.
இந்த உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை முதற் தரம் வாய்ந்தது. இதன் மூலம் இந்த உற்பத்தியின் தரம் மிக உயர் மட்டத்தில் பேணப்பட்டு, தரமானதோர் சிற்றுண்டியாக இது விநியோகிக்கப்படுகின்றது. இதனால், இந்த உற்பத்திகள் இன்று வீட்டுக்கு வீடு பரிச்சயமான ஒன்றாகி விட்டது. சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அதன் தரமும், சுவையும் அமைந்துள்ளது. இதன் நறுமணம் காரணமாக, சந்தையிலும் இது தனியானதோர் இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மிகச்சிறந்த முன்னணி சிற்றுண்டியாக இது திகழுகின்றது.
வரையறுக்கப்பட்ட ஊ.று.மெக்கீ தனியார் நிறுவனக் குடும்பத்தின் உணவு உற்பத்திகளை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்தல். விநியோகித்தல் என்பனவற்றுக்குப் பொறுப்பான பிரிவே இதனை சந்தைப்படுத்தி வருகின்றது. ஸ்கேன் உற்பத்தி பிரிவானது, உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பிரிவாகும். சன்குவிக், ஸ்கேன் குடிநீர் போத்தல், ஸ்கேன் ஜம்போ பீனட்ஸ், கொட்டகல கஹட்ட, முஏஊ உற்பத்திகள் எனப் புகழ்பெற்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்திகளை விநியோகிப்பதன் மூலம் வீட்டுக்கு வீடு புகழ்பெற்ற ஒரு நிறுவனமாக இந்தப் பிரிவு திகழுகின்றது.
இந்நிறுவனத்தின் சந்தைக் கட்டமைப்பு மற்றும் விநியோக மூலோபாய அலைவரிசை என்பன நான்கு வித்தியாசமான சேவை வலையமைப்பின் ஆதரவுடன் பணியாற்றுகின்றது. பாரம்பரிய வர்த்தகம், நவீன வர்த்தகம், மொத்த வியாபாரம், நிறுவன வர்த்தகம் மற்றும் உணவுச் சேவை பிரிவு என்பனவே அவை. இந்த மூலோபாயங்களில் நிறுவனம் தீவிர கவனம் செலுத்துகின்றது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் இந்த உற்பத்திகள் உரிய காலப்பகுதியில் கிரமமாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த மூலோபாயங்கள் செயற்படுகின்றன.
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago