2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ஸ்டேவியா சுவையூட்டி அறிமுகம்

Editorial   / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பியோசேர்க்கல் நிறுவனம், தமது இயற்கை உற்பத்தியான ஸ்டேவியா சுவையூட்டியை, உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக, CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி உடன், வர்த்தக உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ‘மடுபத்ர’ என அழைக்கப்படும், ஒளடத தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் தாவரவியல் உற்பத்தியான இந்தச் சுவையூட்டி, உள்நாட்டு உணவு, மென்பானத் துறையில் புதிய மாற்றத்தை நோக்கிக் கொண்டு செல்லவுள்ளது. சீனிக்குப் பதிலாக,  பூச்சிய கலோரி கொண்ட, குறைந்த கிளைகெமிக் உற்பத்தியாக, இது சந்தையில் கிடைக்கிறது.   

சீனி மற்றும் அதிக கலோரி கொண்ட காபோஹைட்ரேட்டுக்குப் பதிலாக  அல்லது குறைந்த சீனி உணவு, மென்பானங்களைப் பயன்படுத்துவதை விடவும்,  தூய்மையான ஸ்டேவியா இலைச்சாறு குருதியின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதோடு சக்தி நுகர்வுக்கும் உதவுவதாக, ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஸ்டேவியா உடல் பருமனைக் குறைக்கவும் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுவதனால், அது சுகாதார ரீதியான உணவாகவும் கருதப்படுகிறது. தென் அமெரிக்காவின் கன்டுபிடிப்பான ஸ்டேவியா தாவர இலை வைத்தியத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன்,  தென்னமெரிக்காவில், தேநீரைச் சுவையூட்டும் ஒரு தயாரிப்பாகவும் விளங்கி வருகிறது. 

உணவு, மென்பானத் துறையில் ஒரு முக்கிய உள்ளடக்கமாக, உலகம் முழுவதும் ஸ்டேவியா பயன்படுத்தப்படுகிறது. காபன் உட்சேர்க்கப்பட்ட பானங்கள், இனிப்பு வகைகள், யோகட், சொக்கலேட், வெதுப்பக உணவு வகைகள், மருந்து வகைகளில், பிரதானமாக இது பயன்படுத்தப்படுகிறது. அதி தூய்மையான ஸ்டேவியா இலைச் சாற்றின் பாதுகாப்பு நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாதரணமாக பயன்படுத்தக்கூடிய சுவையூட்டியாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். ஆரோக்கியமான வாழ்வுக்கும் நீரிழிவு, ஏனைய தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் இது மிகவும் சிறந்தது. 

உலகம் முழுவதுமுள்ள முக்கிய சுகாதார நிறுவனங்களான EFSA (EU), US FDA, FSSAI (India), China, JECFA மற்றும் Codex Alimentarius Commission of FAO/WHO என்பன ஸ்டேவியாவின் பயன்பாட்டை அங்கிகரித்துள்ளன. 

CIC ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தொழிற்றுறைத் தீர்வுகள் பிரிவின் பணிப்பாளர் துஷார யட்டிகம்மான இதுபற்றிக் கூறுகையில், “இலங்கைக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில், CIC அவதானம் செலுத்தி வருகிறது.

சீனியை அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு நாடாக, இலங்கை உள்ளதனால், சீனிக்குப் பதிலான மாற்று உற்பத்திகளை அறிமுகப்படுத்துவது ஒரு முக்கிய தேவையாகும். உலக ஸ்டேவியா உற்பத்திகளின் முன்னோடியான பியோசேர்க்கிலுடனான எமது ஒன்றிணைப்பு, இதற்கு பேருதவியாக அமைந்துள்ளது. பாரியளவிலான உணவு, மென்பான உற்பத்தி நிறுவனங்களின் சீனி பயன்பாட்டை இயற்கை சுவையூட்டியான ஸ்டேவியா தாவரச் சாற்றின் மூலம் குறைவடையச் செய்ய CIC நடவடிக்கை எடுத்து வருகிறது”  என்று கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .