Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெவ்லொக் விளையாட்டுக் கழகத்துக்கான 2016, 2017 வருடத்துக்கானப் போஷாக்கு அனுசரணையை வழங்க லங்கா மில்க் பூட்ஸ் உற்பத்தியான டெய்லி எக்டிவ் முன்வந்துள்ளது.
அண்மையில் ஹெவ்லொக் விளையாட்டுக் கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தில், ஹெவ்லொக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் லால் சில்வாவிடம் லங்கா மில்க் பூட்ஸின் வர்த்தக முகாமையாளர் தனஞ்சய சேனாரத்ன அனுசரணைக்கானப் படிவத்தை கையளித்தார்.
இந்த அனுசரணைத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஹெவ்லொக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் லால் சில்வா, “இந்த அனுசரணை ஊடாக றகர் விளையாட்டை கழக மட்டத்திலும் நாட்டிலும் மேம்படுத்த முடியும். எமக்கு அனுசரணை வழங்க முன்வந்த லங்கா மில்க் பூட்ஸ் நிறுவனத்துக்கு நன்றிகள்” என்றார்.
லங்கா மில்க் பூட்ஸ் நிறுவனத்தின் வர்த்தக முகாமையாளர் தனஞ்சய சேனாரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “எமது டெய்லி எக்டிவ் இளைஞர்களுக்கு தேவையான சக்தியை வழங்கும் பானமாகும். அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கான சக்தியை இது வளங்கும். விளையாட்டில் வெற்றி பெறுவதைப் பார்க்கிலும், விளையாட்டில் முழுமையான ஈடுபாட்டுடன் பங்குபற்றுவதே அவசியம் என்பது எனது கருத்தாகும். நூற்றாண்டு கால வரலாற்றை கொண்ட கழகத்துடன் கைகோர்க்கக் கிடைத்தமை மகிழ்ச்சியானது” என கூறினார்.
ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தின் பொருளாளர் துஷித்த பீரிஸ், செயலாளர் ஆர்.அபேவிக்கிரம, டெய்லி எக்டிவ் சார்பாக பிரசார, மக்கள் தொடர்பாடல் முகாமையாளர் வருண எம். பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .