Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூன் 14 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணங்கள் நடைபெறுகின்ற பருவகாலம் முழுமூச்சில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற வேளை, நீங்கள் மிகவும் அழகாக காட்சியளிப்பதற்கான அனைத்து சிறப்பம்சங்களையும் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட உங்களுக்குரிய திருமணம்சார் தேவைகளை ஹமீடியாவின் 2016 திருமண ஆடைத் தெரிவுகள் (Hameedia’s 2016 Wedding Collection) தம்வசம் கொண்டுள்ளன.
ஹமீடியாவின் 2016 திருமண ஆடைத் தெரிவுகள் ஆறு பாரம்பரிய ஆடைத் தொகுதிகளை (Suits) கொண்டுள்ளன.
இவை ஐவரி, கிறீம் மற்றும் தங்கம் ஆகிய மூன்று வேறுபட்ட நிறங்களைக் கொண்டதாக காணப்படுகின்றன. உங்களது திருமண நாளில் நீங்கள் தனித்துவமாக மிளிர்வதற்கு ஏற்ற வகையில் இந்த ஆடைத் தொகுதிகள் அழகுற வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
'மூன்று தலைமுறையைச் சேர்ந்த மணமகன்களுக்கு ஆடை அணிவித்த நிறுவனம் என்ற தனிச்சிறப்புமிக்க உயர்ந்த ஸ்தானத்தை ஹமீடியா அனுபவிக்கின்றது. எமது திருமண ஆடைத் தெரிவுகள் இந்தச் சாதனைமிகு அடைவை கொண்டாடுகின்றது. இப் புதிய ஆடைத் தெரிவுகளை அணிகின்ற ஒரு மணமகன், நிச்சயமாக எல்லோருடைய கவனத்தையும் தன்பக்கம் ஈர்ப்பார்' என்று ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பௌசுல் ஹமீட் தெரிவித்தார். 'பாரம்பரிய ஆடைக் கோலம் எப்போதும் சமநிலைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அந்தவகையில் ஹமீடியாவின் தெரிவுகள், கடந்தகாலத் தோற்றப்பாட்டுடன் நவீனமான தற்கால தோற்றப்பாட்டையும் கலவையாக வழங்குகின்றது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆடைத் தெரிவுகள் பற்றி அவர் விபரிக்கையில், 'பாரம்பரிய ஆடைக் கோலத்தின் கிளசிக் இழையோடிய தன்மைக்கு பாரம்பரிய ஆடைத் தெரிவானது, மதிப்பளிக்கின்றது. ஆனால், உயிரோட்டமுள்ள இளைஞர்கள் நாடிச் செல்லும் நவீன தன்மையுள்ள ஆடைப் பொருத்தம் மற்றும் புதுவகையான அச்சுப் பதிப்புக்கள் மற்றும் துணி வகைகளையும் இது ஒன்றாக இணைத்துள்ளது' என்றார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago