2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தற்காலிக ஓலை வீட்டினை தீயிட்ட சேதப்படுத்திய 14 பேருக்கும் பிணை

Gavitha   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிஜ்ராபுரம் பிரதேசத்திலுள்ள காணியொன்றிற்குள் நுழைந்து தற்காலிக ஓலை வீடொன்றை தீயிட்டுக் கொழுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரையும் பிணையில் செல்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் எஸ்.பரஞ்சோதி ஞாயிற்றுக்கிழமை (28) அனுமதி வழங்கியுள்ளார்.

முல்லைத்தீவு ஹிஜ்ராபுரம் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குள் சனிக்கிழமை (27) உட்புகுந்த 14 பேர் கொண்ட குழுவினர, ஓலையினால் கட்டப்பட்டிருந்த தற்காலிக வீடொன்றினை தீயிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்ப்பில், காணியின் உரிமையாளர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து, குறித்த 14 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

வீட்டினை தீயிட்டுக்கொழுத்தியமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை, சட்ட விரோதமாக ஒன்றுகூடியமை, சட்டவிரோதமாக உட்புகுந்தமை, கூரிய ஆயுதங்கள் வைத்திருந்தமை என ஐந்து குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும்  ஞாயிற்றுக்கிழமை (28) முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே ஆமற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இரண்டு தரப்பினர் மத்தியில் நிலவி வரும் காணித் தகராறு காரணமாகவே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை  ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகவும் முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை இன்று (29) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவத்தனர்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .