2025 ஜூலை 16, புதன்கிழமை

வவுனியா கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் 4 ஆண்டு திட்டமிடல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பாக 4 ஆண்டு திட்டமிடல் சனிக்கிழமை (13) வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் இடம்பெற்றது.

எதிர்வரும் நான்கு ஆண்டு காலத்தில் கிராமங்களின் அபிவிருத்திகளை மக்களினூடாக அடையாளம் கண்டு முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்தும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட இத்திட்டமிடல் செயற்பாட்டில், 40 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 182 கிராமங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டு தமது கிராமத்தின் அபிவிருத்தியை அடையாளம் கண்டிருந்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் க. சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இத்திட்டமிடல், சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிசோர், சபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு திட்டங்களை அடையாளம் காண உதவியிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .