2025 ஜூலை 26, சனிக்கிழமை

'வவுனியா வடக்கில் மீள்குடியேற்றப்பட்டவர்களில் 90 வீதமானோருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது'

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களில் 90 வீதமானவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தெரிவித்தார்.

சமூக நல்லிணக்கம் தொடர்பான பிரதேச மட்ட கூட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று (3) நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜயசிங்க தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'வவுனி;யா வடக்கில் அனைத்து திணைக்களங்களும் இணைந்து செயற்படுவதன் காரணத்தால் நாம் அடைவு மட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்நிலையில் மேலும் எமது செயற்பாடுகளை முன்னோக்கி செயற்படுத்த நல்லிணக்கம் தொடர்பான இக்கூட்டங்கள் பயனுறுதி மிக்கதாக அமையும். இது திணைக்களங்களின் பங்களிப்புகளுக்கான சிறந்த தருணமாக கருதிக்கொள்ளக்கூடியதாக உள்ளது' என்றார்.

'இந்நிலையில் வவுனியா வடக்கில் பல உள்ளுர் வீதிகள் திருத்தம் செய்யப்படாமல் உள்ளதால் விவசாயத்தை மையமாக கொண்ட இப்பகுதி மக்கள் தமது உற்றபத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்;காக கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இவ்வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு போதுமான நிதி வசதிகள் பிரதேச சபைகளிடம் ன்மையால் இதனை புனரமைப்பு செய்வதற்கு போதுமான நிதியுதவிகள் தேவைப்படுகின்றது' என்றார்.

இதேவேளை பிரதேச செயலகத்தில் 42 முகாமைத்துவ உதவியாளர்கள் தேவைப்படும் நிலையில் 4 முகாமைத்துவ உதவியாளர்களே உள்ளனர். இதன் காரணமாக பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் உள்ளது' எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X