2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் புதிதாக 90 முறைப்பாடுகள் பதிவு

Sudharshini   / 2014 டிசெம்பர் 15 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் இடம்பெற்று வரும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மேலும் 90 முறைப்பாடுகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற விசாரணைகளின் போது, இரண்டாம் நாள் சாட்சியமளிப்பதற்காக 52 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 47 பேர் மாத்திரமே  சாட்சியமளிக்க வருகைதந்திருந்தனர்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிமை இடம்பெற்ற விசாரணையின் போது 39 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு இன்றைய தினம் மேலும் 51 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், செட்டிகுளத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு 104 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 80 பேர் மாத்திரமே சாட்சியமளிக்க சமூகமளித்திருந்தனர்.

மேலும், செவ்வாய்க்கிழமை (16) வவுனியா பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், 60 பேருக்கு சாட்சியமளிப்பதுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .