2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வட மாகாணத்தில் வெள்ளத்தால் 9515 குடும்பம் பாதிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

  (நவரத்தினம்)
வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில்  9515 குடும்பங்களை சேர்ந்த 30,714 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் விபரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் 4550 குடும்பங்களை சேர்ந்த 15891 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிப்பதுடன் மன்னார் மாவட்டத்தில் 2680 குடும்பங்களை சேர்ந்த 7274 பேர் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் தொவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 706 குடும்பங்களை சேர்ந்த 2525 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1579 குடும்பங்களை சேர்ந்த 5024 பேரும் பாதிப்படைந்துள்ளதாக  அந்தந்த மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையங்கள் தெரிவத்துள்ளன.

இதேவேளை வவுனியாவில் 42 முகாம்களும் மன்னாரில் 12முகாம்களும் கிளிநொச்சியில் 2 முகாம்களும் திறக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X