2025 ஜூலை 24, வியாழக்கிழமை

முல்லைத்தீவு, நாயாறில் 20 ஏக்கர் காணி சுவீகரிப்பு: ரவிகரன்

Super User   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


முல்லைத்தீவு, நாயாற்றில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான இருபது ஏக்கர் காணியினை தென்னிலங்கையினை சேர்ந்த ஒருவர் சுவீகரிக்க முயன்றுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

"தென்னிலங்கையினைச் சேர்ந்த ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் அந்தக் காணியினைச் சுற்றி வேலிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்வாறு அத்துமீறி காணி பிடிக்கும் நடவடிக்கையினைக் கேள்வியுற்ற அப்பகுதி மக்கள், கிராம சேவகரிடமும் என்னிடம் முறையிட்டனர்.

நாங்கள் உடனடியாக அங்கு சென்ற போது, அந்தநபர் "நீங்கள் எங்கு சென்று முறையிட்டாலும் பரவாயில்லை" என மிரட்டும் பாணியில் தெரிவித்தார். எனினும் அங்கு கூடிய பொதுமக்கள் காணியினை சுற்றி போடப்பட்டிருந்த வேலிகளை பிடுங்கி அகற்றினர்.

மேற்படி காணி வெளிநாட்டில் வாழும் அப்பிரதேச வாசிகள் இருவருக்குச் சொந்தமானது என்பதுடன் அக்காணிகளை அப்பிரதேசத்தில் காணிகள் இல்லாத மக்களுக்கு வழங்கப் போவதாக காணிச் சொந்தக்காரர்கள் தெரிவித்திருந்துள்ளனர்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .